COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய வானிலை ஆய்வு மையம்‌ வெளியிட்ட அறிவிக்கையில்‌, தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ தென்‌ கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது "மாண்டஸ்‌" புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார்‌ 550 கி.மீ. தொலைவில்‌ நிலைக்கொண்டுள்ளது என்றும்‌, இது மேற்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து புதுச்சேரி மற்றும்‌ ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே 09.12.2022


அன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும்‌ என்றும்‌ ‌தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 11-12-2022 வர தமிழ்நாட்டில்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ கனமழை முதல்‌ அதி கனமழை பெய்யக்கூடும்‌ எனறும்‌, கடலோரப்‌ பகுதிகளில்‌ மணிக்கு 50 முதல்‌ 70 கிலோ மீட்டர்‌ வேகம் வரை பலத்த காற்று மற்றும்‌ தரைக்காற்று வீசக்கூடும்‌ என்றும்‌, இந்திய வானிலை ஆய்வு மையத்தால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக அரசின்‌ தலைமைச்‌ செயலாளர்‌ அவர்கள்‌ புயல்‌ மற்றும்‌ கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மற்றும்‌ பல்வேறு துறைகளின்‌ தயார்‌ நிலை குறித்து துறை உயர்‌ அலுவலர்களுடன்‌ விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர் ‌.


கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்‌ மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்‌ மற்றும்‌ தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள்‌ கூடுதல்‌ தலைமைச்‌ செயலர்‌ / வருவாய்‌ நிருவாக ஆணையர்‌களுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன. தேசிய பேரிடர்‌ மீட்புப்‌ படை மற்றும்‌ தமிழ்நாடு பேரிடர்‌ மீட்புப்‌ படையின்‌ 396 வீரர்கள்‌ அடங்கிய 12 குழுக்கள்‌ நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, சென்னை திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌ மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.


கடலோரப்‌ பகுதிகளில்‌ அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள்‌ மூலம்‌, கடலோரப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ பொது மக்களுக்கு தொடர்ந்து புயல்‌ குறித்த அறிவிப்புகளை வழங்க வேண்டும் எனவும், வங்கக்கடலில்‌ உருவாகியுள்ள புயல்‌ சின்னத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறைகளை குறுஞ்செய்திகள்‌ வாயிலாக தொடர்ந்து நடவைக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது‌.


மேலும், பேரிடரின்‌ போது காவல்துறை மூலமாக போக்குவரத்தை சீரமைக்க போதுமான காவலர்களை ஈடுபடுத்த வேண்டும்‌. பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இடங்களில்‌ முன்கூட்டியே தேவையான படகுகள்‌, உபகரணங்கள்‌ வைத்திருக்க வேண்டும்‌. மீனவர்கள்‌ மறு அறிவிப்பு வரும்‌ வரை கடலுக்கு மின்பிடிக்க செல்லாமல்‌ இருப்பதை உறுதி செய்ய வேண்டும்‌. பாதிப்பிற்குள்ளாகும்‌ பகுதிகளை தொடர்ந்து பல்‌ துறை மண்டலக்‌ குழுக்கள் மூலம்‌ கண்காணிக்க வேண்டும்‌. பலத்த காற்று காரணமாக விழும்‌ மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்௧கள்‌ மற்றும்‌ இதர உபகரணங்களுடன்‌ நடமாடும்‌ குழுக்கள்‌ அமைப்பதோடு, போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்‌ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மின்‌ கம்பங்கள்‌, மின்‌ கடத்திகள்‌ ஆகியவற்றின்‌ இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகும்‌ மின்‌ இணைப்புகளை சீரமைக்க குழுக்கள்‌ அமைக்க வேண்டும்‌. மணல்‌ மூட்டைகள்‌, கம்பங்கள்‌, அவசரகாலத்தில்‌ தேவையான மருந்துகள்‌ இருப்பு வைக்க வேண்டும்‌. பாதிப்பிற்குள்ளாகும்‌ தாழ்வான பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில்‌ தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர்‌, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ செய்து கொடுக்க வேண்டும்‌. தங்கு தடையின்றி குடிநீர்‌ வழங்குவதற்கு போதுமான ஜெனரேட்டர்கள்‌ வைத்திருக்க வேண்டும்‌. பால்‌ மற்றும்‌ பால்பவுடர்‌ விநியோகம்‌ தடையில்லாமல்‌ நடைபெற உரிய ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்‌. எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | தமிழகத்தை மிரட்டும் மான்டோஸ் புயல்... தயார் நிலையில் NDRF குழு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ