சாதிவாரி கணக்கெடுப்பு: 'முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை' - மு.க. ஸ்டாலின்

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Apr 30, 2025, 09:36 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு: 'முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை' - மு.க. ஸ்டாலின்

டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்,தேசிய மக்கள் கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவை அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை எப்போது தொடங்குவீர்கள்? எப்போது முடிப்பீர்கள் என்ற கேள்வியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுப்பி உள்ளார்.    

Add Zee News as a Preferred Source

இது தொடர்பாக தமிழக முதலைமைச்சர் பதிவிட்டுள்ளாவது, மிகவும் அவசியமான சாதி கணக்கெடுப்பை மறுத்து தாமதப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், மத்திய பாஜக அரசு இறுதியாக வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை - மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? அது எப்போது முடிவடையும்?

இந்த அறிவிப்பு வெளியான நேரம் தற்செயலானது அல்ல. பீகார் தேர்தல் சமூகநீதி என்பது பேசும் பொருளாகி உள்ள நிலையில், இந்த திடீர் நடவடிக்கை அரசியல் நோக்கத்திற்காகவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு காலத்தில் எதிர்க்கட்சிகள் சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பதாக குற்றம் சாட்டிய அதே பிரதமர், இப்போது அவர் அந்த கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார்.

கொள்கை வகுத்தல், மக்கள் நலன் மற்றும் உண்மையான சமூக நீதியைப் பின்தொடர்வதற்கு சாதி கணக்கெடுப்பு அவசியம் - விருப்பத்திற்குரியது அல்ல. அநீதியை கண்டறியாமல் அதைச் சரிசெய்ய முடியாது. இது தமிழக அரசுக்கும் திமுகவிற்கும் கிடைத்த வெற்றி. சாதி கணக்கெடுப்பு கோரி சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முதலில் நிறைவேற்றியவர்கள் நாங்கள். இந்த நோக்கத்தை ஒவ்வொரு மன்றத்திலும் நாங்கள் வலியுறுத்தினோம். பிரதமருடனான ஒவ்வொரு சந்திப்பிலும், பல கடிதங்கள் மூலமாகவும் இந்தக் கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தினோம். மத்திய அரசு பொருப்பேறக் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினோம். 

மற்றவர்கள் மாநில அளவிலான சாதி கணக்கெடுப்புகளுக்கு அழைப்பு விடுத்தாலும், நாங்கள் உறுதியாக இருந்தோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய பட்டியலில் வருவது. மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு மட்டுமே சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட சாதி கணக்கெடுப்பை வழங்க முடியும், வழங்க வேண்டும். எங்கள் நிலைப்பாடு இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடலின் கொள்கைகளால் இயக்கப்படும் எங்கள் கடினமான சமூக நீதிப் பயணத்தில் திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு மற்றொரு வெற்றி என பதிவிட்டுள்ளார். 

மேலும் படிங்க:  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மேலும் படிங்க: காமாட்சியம்மன் அருளாளே விரைவில் திமுக ஆட்சி அகற்றப்படும் - நயினார் நாகேந்திரன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News