Tamil Nadu Uzhavar Nala Sevai Maiyam: கரூர் மாவட்டம் தோட்டக்கலை துறையின் மூலம் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் திட்டம் 2025-26 ஆம் ஆண்டிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் இளநிலை விவசாயம், தோட்டக்கலை, வேளாண், பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முடித்தவர்கள் இம்மையம் தொடங்கிட விண்ணப்பிக்கலாம். இம்மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி நோய் மேலாண்மைக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.
முதலமைச்சரின் உழவர் நல சேவை : ரூ.6 லட்சம் மானியம்
அத்துடன் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுதல் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் 10 இலட்சம் ரூபாய் முதல் 20 இலட்சம் ரூபாய் மதிப்பிலான இம்மையங்கள் அமைத்திட 30 சதவீத மானியமாக 3 இலட்சம் ரூபாய் முதல் 6 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள் வேளாண்மை (அ) தோட்டக்கலை (அ) வேளாண்மைப் பொறியியல் (அ) வேளாண் வணிகம் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். விதை விற்பனை உரிமம், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்வதற்கான உரிமம் பெற வேண்டும். அரசு மற்றும் அரசுசார் நிறுவனத்தில் பணியில் இருத்தல் கூடாது. வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிவோர் நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாக இருத்தல் வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் வேளாண், தோட்டக்கலை சார்ந்த பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முடித்த நபர்கள் உரிய வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெறப்பட்ட பின் இத்திட்டத்தில் மானிய உதவி பெற AGRISNET இணையதளத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரரிடத்தில் உழவர் நல் சேவை மையத்தில் இடுபொருட்கள் விற்பனை செய்வதற்கு தேவையான உரிமங்கள் இல்லாதபட்சத்தில் விண்ணப்பிக்கும்போதே உரிமங்கள் பெறுவதற்கு உரிய படிவங்களில் AGRISNET இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு
உழவர் நல சேவை மையம் அமைப்பதற்கு 300 சதுர அடியில் மையம் அமைத்து வேளாண் இடுபொருட்கள் விற்பனை செய்பவர்கள் ரூபாய் 10 இலட்சம் வரையிலான முதலீட்டில் தொழில் தொடங்கலாம். இதற்கு ரூ.3 இலட்சம் மானியம் வழங்கப்படு கிறது.600 சதுர அடியில் மையம் அமைத்தால் ரூபாய் 20 லட்சம் முதலீட்டுடன் ரூ.6 இலட்சம் வரை மானியம் பெற முடியும். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அவர்களை அனுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: வங்கக் கடலில் நாளை சம்பவம்.. சென்னையில் கொட்டும் கனமழை.. வெதர்மேன் வார்னிங்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









