)
Tamil Nadu Latest News Updates: தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட் வரும் மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் நிலையில், எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது அன்றே அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
Tamil Nadu Budget 2025: பட்ஜெட்டுக்கு தயாராகும் தங்கம் தென்னரசு
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021-22, 2022-23, 2023-24, 2024-25 ஆகிய நான்கு பட்ஜெட்டை இதுவரை தாக்கல் செய்துள்ளது. முதல் மூன்று பட்ஜெட்களை சட்டப்பேரவையில் அப்போதைய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார். கடந்தாண்டு பட்ஜெட்டை தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். வரும் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டையும் தங்கம் தென்னரசே தாக்கல் செய்ய இருக்கிறார்.
Tamil Nadu Budget 2025: முதல்முறையாக பொருளாதார ஆய்வறிக்கை
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், முதல்முறையாக தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய இருக்கிறார். மத்திய பட்ஜெட்டுக்கு முன் பொருளாதார ஆய்வறிக்கை நிதி அமைச்சகத்தால் தாக்கல் செய்யப்படும். ஆனால், தற்போது தமிழ்நாட்டில் முதல்முறையாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இதன்மூலம், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, தற்போதைய நிதிநிலை மற்றும் அடுத்தாண்டில் நிதிநிலை எப்படி இருக்கும் என்ற கணிப்பு, உள்நாட்டு உற்பத்தி ஆகியவை குறித்து இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் விரிவாக குறிப்பிடப்படும். அந்த வகையில், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மீது மட்டுமின்றி பொருளாதார ஆய்வறிக்கை மீதும் பலரின் கவனம் திரும்பி உள்ளது.
Annamalai: 'ஸ்டாலின் அடித்த கமிஷன் எவ்வளவு?' - அண்ணாமலை
அந்த வகையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டை குறிப்பிட்டு இன்று அவரது X தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பதிவிட்டிருந்தார். அந்த பதிவில்,"இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும்.
கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு, ஸ்டாலின்?" என குறிப்பிட்டுள்ளார்.
Thangam Thennarasu: உயர்ந்துள்ள இந்தியாவின் கடன் சுமை
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினிடம் அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கும், எழுப்பிய குற்றச்சாட்டுக்கும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து தங்கம் தென்னரசு அவரது X பதிவில்,"2014ஆம் ஆண்டு ரூ.55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு ரூ.181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ?
2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ?
— Thangam Thenarasu (@TThenarasu) March 3, 2025
தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள்… https://t.co/Rce9HEzuw1
தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.
கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல" என குறிப்பிட்டுள்ளார்.
Tamil Nadu Budget 2025: எகிறும் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு
அடுத்தாண்டு, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது என்பதால் இந்த பட்ஜெட்தான் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட்டாகும். அடுத்தாண்டு இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படும், அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட இயலாது. அந்த வகையில், இந்த பட்ஜெட்டில் அதிகளவு புதிய திட்டங்கள், அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ