Tamil Nadu government, Dearness allowance hike : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் நிறைவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியாதரர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அகவிலைப்படி உயர்வு, அரியர் தொகை ஆகியவை இம்மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நான்கு மாத சம்பளத்துடன் அரசு ஊழியர்கள் 2 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி நிலுவைத்தொகை ஆகியவற்றை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெற உள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ண் கீழ் சட்டப்பேரவையில் அண்மையில் வெளியிட்ட 9 முக்கிய அறிவப்புகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
1. கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலே, அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
2. மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் . இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
3. அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கெனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை கால முன்பணம் தற்போது இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
4. அரசுப் பணியாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்காக வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ஒரு லட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
5. அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஆண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
6. பொங்கல் பண்டிகையையொட்டி குரூப் C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும்.
7. ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட, பண்டிகை கால முன்பணம் ஆறாயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
8. அண்மையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும்.
9. திருமணமான அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு, அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளது.
என முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், அதில் ஒன்றான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவில்லைப்படி உயர்வு, அரியர் தொகை கோரிக்கை இன்றைய அரசாணை மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: மீண்டும் உயரும் அகவிலைப்படி, CPI-IW மூலம் வந்த குட் நியூஸ்
மேலும் படிக்க | தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு எப்போது? ஸ்டாலினின் ஐடியா என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ