)
தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் குறிப்பாக கட்டணம் இல்லா பேருந்து சேவை மகளிர், உரிமைத்தொகை திட்டம், உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம், தோழி விடுதலைகள் திட்டம் போன்ற திட்டங்களை சொல்லலாம். மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூபாய் 1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
அதே போல அரசு பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடனும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஏழைப் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மாணவிகள் மற்றும் பெண்கள் தவிர புதிதாக திருமணம் ஆகும் பெண்களுக்கான திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணங்களுக்கு, திருமண உதவித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் திருமண செலவுக்கான பணமும், தங்கமும் வழங்கப்படுகிறது.
திருமண உதவித்தொகை திட்டம்!
கணவரை இழந்த விதவை தாய்மார்களுக்கு அவர்களின் மகள் திருமணத்திற்கு ஈவேரா மணியம்மையார் நினைவு திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூபாய் 25,000 பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூபாய் 50,000 பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. மேலும் அன்னை தெரசா நினைவு திட்டத்தின் மூலம் ஆதரவற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூபாய் 25,000 பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூபாய் 50,000 பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.
விதவைகளின் மறுமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கல்வித் தகுதி இல்லாத பெண்களுக்கு ரூபாய் 25,000 பணமும், 4 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. அதுவே பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூபாய் 50,000 பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகையை பெற குடும்ப வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இந்த திட்டங்களில் பயன்பெற முடியும். இந்த திட்டங்களில் உதவித்தொகை பெற திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது உங்களின் திருமண அழைப்பிதழ், மணமகன் மற்றும் மணமகளின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ், கல்வி சான்றிதழ், வங்கி கணக்கு விவரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ