Tamil Nadu Govt Offers Free Hostel : நீலகிரி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கான தமிழ்நாடு அரசின் 18 தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் தங்கிக்கொள்வதற்கு விண்ணப்பிக்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழ்நாடு அரசால் நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மாணவியர்களுக்கென மொத்தம் 18 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான பள்ளி விடுதிகள் 11, மாணவிகளுக்கான பள்ளி விடுதிகள் 2, கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் 3, கல்லூரி மாணவிகளுக்கான விடுதிகள் 2 செயல்பட்டு வருகிறது. பள்ளி விடுதிகளில் 4ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர் / மாணவியர்களுக்கு கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ / மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.
* விடுதிகளில் பின்வரும் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
1. அனைத்து விடுதி மாணவ / மாணவியருக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.
2. 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு 4 இணைச் சீருடைகள் தைத்து வழங்கப்படும்.
3. 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.
4. கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவ / மாணவியருக்கு ஜமக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியருக்கு ஆண்டுதோறும் பாய்களும் வழங்கப்படும்.
5. மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
* விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்
1. பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ- க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.
3. தகுதியுடைய மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் கூடுதல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 18.06.2025-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2025-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
5. மாணவ / மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
6. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே பள்ளி / கல்லூரி மாணவ / மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | இனி அலையவே வேண்டாம்... உங்களை தேடி வரும் தமிழக அரசு திட்டங்கள் - மிஸ் பண்ணாதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









