ரூ.50,000 ஊதியத்தில் தமிழ்நாடு அரசு வேலை - அட்டகாசமான அறிவிப்பு,முழு விவரம்

Tamil Nadu government jobs : ரூ.50,000 வரையிலான மாத ஊதியத்தில் நீலகிரி மாவட்டத்தில் அரசு வேலை காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jun 11, 2025, 03:39 PM IST
  • தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு 2025
  • நீலகிரியில் மாதம் முழுவதும் பணியாற்றலாம்
  • 50 ஆயிரம் ரூபாய் ஊதியம், தினப்படி உண்டு
ரூ.50,000 ஊதியத்தில் தமிழ்நாடு அரசு வேலை - அட்டகாசமான அறிவிப்பு,முழு விவரம்

Tamil Nadu government jobs : நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் விவசாயம் (Farm) மற்றும் விவசாயம் சாரா (Non Farm) செயல்பாடுகளில் பணியாற்றிட கீழ்கண்ட தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

Add Zee News as a Preferred Source

தேர்வு செய்யும் முறை

கல்வித்தகுதி : 

* விவசாயம் சார்ந்த மாவட்ட வளப்பயிற்றுநருக்கு விவசாயம் சம்மந்தப்பட்ட இளநிலை கால்நடைஅறிவியல்/ தோட்டக்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

* விவசாயம் சாரா மாவட்ட அளவிலான வளப்பயிற்றுநருக்கு ஊரக வளர்ச்சி சமூக பணி/ தொழில் மேலாண்மை சம்மந்தப்பட்ட பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம் : தேர்ந்தெடுக்கப்படும் மாவட்ட வளப்பயிற்றுநர் சம்மந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தொடர்பு திறன் : ஊரக பகுதிகளில் பணியாற்ற தமிழ் எழுத மற்றும் பேசவும், பணிதொடர்பாக ஆங்கில அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

மென்பொருள்திறன் : கணிணி இயக்கத்தில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

தேர்ந்தெடுக்கப்படும் மாவட்ட வளப்பயிற்றுநர்களுக்கு அவர்களது அனுபவத்தின் அடிப்படையில் கீழ்கண்டவாறு ஊதியம் வழங்கப்படும்.

* முன் அனுபவம் 10 வருடம் அல்லது அதற்குமேல் இருக்கும் பட்சத்தில் மதிப்பூதியம் நாளொன்றுக்கு ரூ.3,500/- வழங்கப்படும் மற்றும் வெளிமாவட்டங்களில் பயணம் மேற்கொள்ளும்போது நாளொன்றுக்கு உணவு செலவினம் ரூ.300/-மும், தங்குமிடச்செலவினம் ரூ.1200/- வழங்கப்படும்.

* முன் அனுபவம் 6 முதல் 8 வருடம் வரை இருக்கும் பட்சத்தில் மதிப்பூதியம் நாளொன்றுக்கு ரூ.2,500/- வழங்கப்படும் மற்றும் வெளிமாவட்டங்களில் பயணம் மேற்கொள்ளும் போது நாளொன்றுக்கு உணவு செலவினம் ரூ250/ மும், தங்குமிடச்செலவினம் ரூ.1000/-வழங்கப்படும்.

* முன்அனுபவம் 2 முதல் 8 வருடம் வரை இருக்கும் பட்சத்தில் மதிப்பூதியம் நாளொன்றுக்கு ரூ.2,000/- வழங்கப்படும் மற்றும் வெளிமாவட்டங்களில் பயணம் மேற்கொள்ளும் போது நாளொன்றுக்கு உணவு செலவினம்ரூ.250/-மும், தங்குமிடச்செலவினம் ரூ.750/- வழங்கப்படும்.

* அதிகபட்சம் மாதம் ஒன்றிக்கு 15 நாட்கள் பயணம் மேற்கொள்ளப்படவேண்டும்.

* மாவட்ட வளப்பயிற்றுநர் பயணம் மேற்கொள்ளும்போது 2ம்வகுப்பு இரயில் பேருந்து மட்டுமே அனுமதிக்கப்படும்.
·
* மேற்படி ஊதியமானது மாவட்ட வளப்பயிற்றுநர் பணிபுரியும் நாட்களின் அடிப்படையில் வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 15 நாட்கள் பணியாற்ற வேண்டும்.

மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதி உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தினை கீழ்காணும் முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலமோ வருகின்ற 13.06.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்புமாறு ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி - 

திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு மாநில ஊரக  வாழ்வாதார இயக்கம்,
பிபிளாக், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பிங்கர் போஸ்ட், உதகை,
நீலகிரி மாவட்டம் 643006
மின்னஞ்சல் முகவரி dpi ngs@yahoo.com
அலைபேசி எண்-9444094131. 

மேலும் படிங்க: பெண்களே... 8% வட்டியில் ரூ.1.50 லட்சம் வரை கடன் - தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்!

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: மீண்டும் விண்ணப்பிக்கலாம்! தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News