)
தமிழக அரசு பொதுமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என மக்கள் நலன் காக்கும் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இன்று செப்டம்பர் 15 முதல் அன்பு கரங்கள் என்ற புதிய திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான இன்று, ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றும் உன்னத திட்டமான அன்பு கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
சமூகத்தில் மிகவும் வறுமை நிலையில் சிக்கி தவிக்கும் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தாயுமானவர் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக இந்த அன்பு கரங்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்து, அவர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்து கொடுப்பதாகும். சுருக்கமாக சொன்னால், ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து, படிக்க வைத்து, சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரும் முழு பொறுப்பையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது.
இந்த திட்டத்தின் மூலம், பின்வரும் சூழல்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறலாம். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொருவரால் பராமரிக்க முடியாத நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகள் பயன் பெறலாம். இத்தகைய சூழலில் உள்ள குழந்தைகளுக்கு, அரசு உதவிக்கரம் நீட்டி, அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரும்.
அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், 18 வயது நிறைவடையும் வரை, மாதந்தோறும் ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும். இந்த தொகை, குழந்தைகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பள்ளி படிப்பை முடித்த பிறகு, அவர்களின் உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கும் அரசு உறுதுணையாக இருக்கும். இந்த சிறப்பு திட்டம், சமூகத்தின் அடித்தட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வில் ஒரு புதிய நம்பிக்கையை விதைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அன்பு கரங்கள் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும். இந்த திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டம்
— Makkalsevai (@Makkalsevai2) July 30, 2025
குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 நிதி
18 வயது வரை கிடைக்கும்#TNscheme #anbukarangal #tngov #TNGovtSchemes pic.twitter.com/IwvvPDLyPG
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ