"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டங்களின் நீட்சியாக, சுகாதார சேவையை கொண்டு சேர்க்கும் அரசின் தொடர் முயற்சிகளில் ஒரு பகுதியாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சேவையை அவர்களின் இடத்திற்கே கொண்டு செல்லும் நோக்கில், "நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற மாபெரும் மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தடுப்பிலிருந்து நல்வாழ்வு வரை என்ற கொள்கையை மையமாக கொண்டு, இந்த திட்டம் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாம்களின் தொடர்ச்சியாக, மக்கள் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு சென்று அதிக செலவு செய்வதை தவிர்க்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதே முக்கிய இலக்காகும்.
இந்த திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள்
இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் பல்வேறு விதமான மருத்துவ சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளது. முகாம்களில் மருத்துவ வல்லுநர்களால் மாற்றுத்திறனாளிகளின் இயலாமை சதவீதம் மதிப்பீடு செய்யப்பட்டு, அவர்களுக்கு அதிகாரப்பூர்வமான மாற்றுத்திறனாளி சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் ஒரு வருட காலத்திற்குள் மொத்தம் 1,164 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம், நகர்ப்புறம், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சுமார் 10 லட்சம் மக்களை சென்றடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, தரமான மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் இந்த முகாம்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
உங்களுடன் ஸ்டாலின்!
கடந்த மாதத்தில் இருந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டமும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு, உடனடியாக தீர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் இதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது அரசு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த முகாம்களின் மூலம் பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க முடியும். பட்டா மாற்றம் முதல் முதியோர் ஓய்வூதியம் வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த முகாம்களில் தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ