Tamilnadu Government Latest News : தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னையில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்டோர் பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாராநிறுவனங்கள். வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் போன்றவற்றில் "பெண்களுக்குஎதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு. தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013* பிரிவு 4 ன்படி பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் "உள்ளக புகார் குழுக்கள்" ( Internal Committee) அமைக்கப்பட வேண்டும்.
இக்குழுவில் குறைந்த பட்சம் 4 உறுப்பினர்களை கொண்டு அமைக்க வேண்டும். அவற்றில் 50% பெண் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனங்களிலும் பாதிக்கப்படும் பெண்கள் தங்களது பிரச்சனைகளை தெரிவிக்க புகார் பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும். புகார் பெறப்பட்டவுடன் உள்ளக புகார் கொண்டு விசாரணை
குழு ( Internal Committee) உறுப்பினர்களை மேற்கொள்ளப்படும். உள்ளக புகார் குழுவில் பதிவு செய்யப்படும் புகார் மற்றும் நடவடிக்கை குறித்து வருடத்திற்கு ஒருமுறை மாவட்ட சமூக நல அலுவலத்தில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் வருடாந்திர அறிக்கையாக அனைத்து நிறுவனமூம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வழங்கப்பட வேண்டும்.
அமைப்பு சாரா பெண்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட ஆட்சியரால் ஒவ்வொரு மாவட்டத்திலும் "உள்ளூர் புகார் குழு" ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் பிரிவு 6 ன்படி 10 க்கும் குறைவாகவுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டால் அந்நபர் தன்னை பணியமர்த்தியவருக்கு எதிராக நேரடியாக அனைத்து மாவட்டங்களில் செயல்படும் "உள்ளூர் புகார் குழு" (Local Committee)-ல் மனு அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழு அமைக்கப்படாத நிறுவனங்களுக்கு தண்டனைவிவரம் உள்ளக புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது புகார் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலோ, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் அல்லது பதிவு இரத்து செய்யப்படும்.
இப்புகார் குழு ஏற்படுத்தாத நிறுவனங்களின் உரிமையாளருக்கு ரூ. 50,000/- வரை அபராதம் செலுத்த நேரிடும். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களைwww.shebox.nic.in என்ற இணையதள முகவரியில் புகார்களை பதிவுசெய்யலாம், எனவே, சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழு ஏற்படுத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் (https://www.tnswd.poshicc.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் அனைத்து நிறுவனங்களின் உள்ளக புகார் குழு வின் விவரங்களை பதிவு செய்ய
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையுடன் ரூ.3000..!! யாரெல்லாம் பெறலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









