வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு - தமிழ்நாடு அரசு போட்ட அதிரடி உத்தரவு

Tamil Nadu government : தமிழ்நாட்டில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்ககளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jun 11, 2025, 01:34 PM IST
  • வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் தமிழ்நாடு அரசு
  • தொழிலாளர் நலத்துறையின் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு
  • அனைத்து தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களும் இப்பணியை செய்ய உத்தரவு
வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு - தமிழ்நாடு அரசு போட்ட அதிரடி உத்தரவு

Tamil Nadu government : தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்களை கணக்கெடுக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றுமாறு தெரிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு முழு விவரம் : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், செங்கல் சூளைகள், உள்ளிட்ட அனைத்து வணிகம்/தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் எண், செல்போன் எண், வங்கி கணக்கு எண் மற்றும் மாநிலம் உள்ளிட்ட விவரங்களை அவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் தொழிலாளர் துறையின் http://labour.tn.gov.in/ism/ என்ற இணையதளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மேலும், தெரு வியாபாரம் உள்ளிட்ட சுயமாக தொழில் செய்யும் வெளிமாநில தொழிலாளர்கள் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச் சொல் ஏற்படுத்தி மேற்படி தொழிலாளர் துறையின் இணையதளத்தில் தங்களது முழு விவரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை மேற்படி தொழிலாளர் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதுடன் அவ்விரங்களை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய ஒப்பந்ததாரர் நிறுவனங்கள் 1979-ம் ஆண்டு மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளர் சட்டத்தின் கீழ் ஒப்பந்ததாரர்கள் உரிமம் பெற்று மேற்படி வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் சாரம்சம் :

* வெளிமாநில தொழிலாளர்களின் முழு விவரங்களையும் நிறுவனங்கள் பதிவேற்ற வேண்டும்

* ஆதார் எண், செல்போன் எண், வங்கி கணக்கு எண் மற்றும் மாநிலம் உள்ளிட்ட விவரங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்

* தெரு வியாபாரம் உள்ளிட்ட சுயமாக தொழில் செய்யும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களையும் அரசு ஊழியர்கள் சேகரிக்க வேண்டும்.

 *ஒப்பந்ததாரர்கள் உரிமம் பெற்று மேற்படி வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News