பொங்கல் பரிசு மட்டும் இல்லை! மக்களுக்கு கிடைக்கப்போகும் கூடுதல் நன்மை!

சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியானவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் இருந்தே பணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

Written by - RK Spark | Last Updated : Dec 7, 2025, 11:23 AM IST
  • பொங்கல் 2026.
  • ரேஷன் அட்டைதாரர்களுக்கு..
  • காத்திருக்கும் 'டபுள் ட்ரீட்'!
பொங்கல் பரிசு மட்டும் இல்லை! மக்களுக்கு கிடைக்கப்போகும் கூடுதல் நன்மை!

தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டு தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இந்த ஆண்டு குடும்பத் தலைவிகளுக்கு டபுள் ட்ரீட் காத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு மட்டுமே இடம் பெற்றிருந்தது. பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. 

Add Zee News as a Preferred Source

இது மக்களிடையே, குறிப்பாக தாய்மார்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் இதனை பெரிய அளவில் விமர்சனம் செய்திருந்தன. ஆனால், இம்முறை நிலைமை தலைகீழாக மாறவுள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இம்முறை பொங்கல் பரிசை மிகவும் பிரம்மாண்டமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: குட் நியூஸ்! மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்

'டபுள் ட்ரீட்'?

பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ரொக்க பணம்: தேர்தல் ஆண்டு என்பதால், இம்முறை நிச்சயம் ரொக்கப் பணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் ரூ.2,500 வரை வழங்கப்பட்டது. எனவே, இம்முறை திமுக அரசு அதனையொட்டியோ அல்லது கூடுதலாகவோ (ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை) வழங்க வாய்ப்புள்ளது. சமூக வலைதளங்களில் ரூ.5,000 வரை கிடைக்கலாம் என பரவும் தகவல்களில் இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என்றாலும், கணிசமான தொகை நிச்சயம் என்கிறார்கள் அதிகாரிகள்.

மகளிர் உரிமைத் தொகை: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. வரும் தைப் பொங்கல் மாதத்தில் (ஜனவரி), இந்த உரிமை தொகையுடன் சேர்த்து பொங்கல் போனஸும் கையில் கிடைக்கும் என்பதால், குடும்ப தலைவிகளுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமையவுள்ளது.

புதிய பயனாளிகளுக்கும் மகிழ்ச்சி

சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியானவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் இருந்தே பணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, புதிதாக சேர்க்கப்படும் லட்சக்கணக்கான பயனாளிகளுக்கும் ஜனவரி மாதம் உரிமைத் தொகையோடு சேர்த்து பொங்கல் பரிசும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும். மேலும் பொங்கல் பரிசில் வழக்கம் போல் வழங்கப்படும் பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன், இம்முறை ரொக்கப் பணம் பிரதானமாக இருக்கும். இது தவிர முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கப்படுமா என்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்திற்கு பிறகு, தொகையின் அளவு மற்றும் விநியோகம் தொடங்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். டோக்கன் விநியோகம் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கலாம். மொத்தத்தில், தேர்தல் நெருங்கும் வேளையில் வரவுள்ள இந்த பொங்கல் பண்டிகை, தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு, குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு பணமழை பொழியும் ஒரு பண்டிகையாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க - பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது? வெளியான தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News