)
தமிழக அரசின் சார்பில் பல்வேறு நல திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. குழந்தைகள் முதல், மாணவர்கள், குடும்ப பெண்கள், வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற திட்டங்களை தனித்தனியாக செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மாற்றுத்திறனாளி கர்ப்பிணிகளுக்காக தமிழக அரசு உதவி தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? தகுதி உடையவர்கள் யார் யார்? எவ்வளவு உதவி தொகை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மாற்றுத்திறனாளி பெண்களுக்கான மகப்பேறு உதவி தொகை திட்டம்
தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு பிரசவத்தின் போது ஏற்படும் செலவுகளுக்காக ரூபாய் 6 ஆயிரம் உதவித்தொகை வழங்குகிறது. இந்த உதவி தொகை கடைசி நேரங்களில் ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்கு பயன்படும் என்றும் கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நல வாரியத் துறையில் உறுப்பினராக இருக்கும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்கும். அதே போல எதிர்பாராத விதமாக ஏற்படும் கரு சிதைவிற்கு ரூபாய் 3000 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த உதவித்தொகை பலருக்கும் மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. குறிப்பாக கடைசி நேரத்தில் நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். மேலும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் உதவும்.
எப்படி விண்ணப்பிப்பது?
மாற்றுத்திறனாளி பெண்கள் மகப்பேறு உதவித் தொகையை பெற நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக 18 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். முக்கியமாக மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். உங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, நலவாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் மற்றும் ரேஷன் கார்டு, குழந்தை பிறப்புச் சான்றிதழ், மருத்துவமனை சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து உதவி தொகை பெறலாம். உங்களது அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 6000 உதவித்தொகை கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ