'தமிழகம் விவசாயத்தை விட்டு நகர்ந்துள்ளது' - பொருளாதார ஆய்வறிக்கையை விரிவாக விளக்கிய ஜெயரஞ்சன்!

Tamil Nadu Economic Survey: தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட பின்னர், திட்டக்குழு துணை தலைவரும், பேராசிரியருமான ஜெயரஞ்சன் அளித்த விளக்கங்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 13, 2025, 05:27 PM IST
  • தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி 8% ஆக நீடிக்கிறது - பொருளாதார ஆய்வறிக்கை
  • தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சி அடைந்துள்ளது - பொருளாதார ஆய்வறிக்கை
  • தமிழ்நாட்டில் வர்த்தக கடன் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது - ஜெயரஞ்சன்
'தமிழகம் விவசாயத்தை விட்டு நகர்ந்துள்ளது' - பொருளாதார ஆய்வறிக்கையை விரிவாக விளக்கிய ஜெயரஞ்சன்!

Tamil Nadu Economic Survey: தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கையை மாநில திட்டக்குழு தயாரித்த நிலையில், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 13) வெளியிட்டார். தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு இந்த பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாட்டிலும் இந்த முறை பொருளாதார ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

TN Economic Survey: பணவீக்கம் குறைந்துள்ளது

"தமிழ்நாட்டின் வரலாற்றில் பொருளாதார ஆய்வறிக்கை தயாரித்து வெளியிடுவது இது முதல் முறை. தமிழ்நாடு பொருளாதாரம் குறித்து முழு அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் வெளியிட்டார். இந்தியாவில் அதிகமாக கார் உற்பத்தி செய்யக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. லெதர், ஜவுளித்துறை உற்பத்தியிலும் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது. 

தமிழ்நாட்டில் சாராசரி தனிநபர் வருவாய் ரூ.2.78 லட்சமாக உள்ளது. தேசிய சராசரி தனிநபர் வருமானமான ரூ.1.69 லட்சத்தைவிட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் தொடர்ந்து அதிகம். தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவருக்குமான பொது விநியோகம் செயல்படுத்தப்படுகிறது. பண வீக்கத்திற்கு முக்கியமான காரணம் காய்கறி விலையேற்றம், தானியங்கள் விலையேற்றைம் முக்கிய காரணிகளாக உள்ளது.

TN Economic Survey: கடன் சுமையை குறைக்க அவசியம் இல்லை

தமிழ்நாட்டில் உற்பத்தியில் துறையின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. AI தொழில்நுட்பம் வரும் போது சேவை துறை எந்தளவிற்கு பாதிக்கும் என்பதை கணிக்க முடியாது.  தொழில்நுட்பம் மாறும் போது அதற்கு ஏற்றவாறும் நிகழ் நேரத்தில் மாற்றம் செய்வதற்கான அறிக்கை குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்தோம்.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வினாத்தாள் ஆய்வு மேற்கொள்ப்படும். வினாத்தாள் மாணவர்களை சிந்திக்க வைக்க வேண்டும், விடைகளை நினைவுப் படுத்தக்கூடாது. இது குறித்து உயர்கல்வி மன்றத்திடம் ஆலோசித்துள்ளோம். மாநிலத்தின் கடன் சுமையை குறைக்க அவசியம் இல்லை. கடன் என்பது பட்ஜெட்டின் ஒரு செயல்முறை. மாநிலத்தின் உற்பத்தி மதிப்பிற்கு ஏற்றவாறு கடன் வாங்காலம்.

TN Economic Survey: AI பாதிப்புகள் 

உற்பத்தி மதிப்பீற்கு கீழேதேன் கடன் வாங்கப்படுகிறது. மூதலீட்டிற்கு செய்யக்கூடிய செலவுகளை கடன் வாங்கிதான் செயல்படுத்த முடியும். மெட்ரோ போன்ற திட்டங்களுக்கு கடன் வாங்கி செயல்படுத்தி 30 ஆண்டுகளில் திருப்பி செலுத்த திட்டம் உள்ளது. கடன்களை அளவு மீறி வாங்க முடியாது, ஆர்பிஐ விதிகளின்படி தான் வாங்க முடியும். 

AI மூலம் பாதிப்புகள் ஏற்படுமா என்பதை உலகத்தில் யாராலும் கணிக்க முடுயவில்லை. கணினி வந்தபோது பெருமளவில் வேலை இழப்பார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் கணினி வேலை செய்ய வைப்பதற்கு ஆட்கள் தேவைப்பட்டது.  ஆனால் AI மூலம் முக்கியமான பணிகளில் வேலையை இழக்க வாய்ப்பு உள்ளது. அது குறித்து வரும் காலங்களில் ஆய்வு செய்ய முதலமைச்சரிடம் ஆலோசித்துள்ளோம். வர்த்தக போர், AI வளர்ச்சி போன்ற காரணங்களால் எதிர்கால ஜிடிபி குறித்து இடம்பெறவில்லை. நமது பொருளாதாரம் விவசாயத்தை விட்டு நகர்ந்துவிட்டது.

TN Economic Survey: பொருளாதார வளர்ச்சி

இந்தியாவிலே தமிழ்நாடு தான் அதிக வர்த்தக கடன் கொடுத்து வருகிறது. முக்கியமாக அதிக பெண் தொழில் முனைவோர் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.  காலநிலை மாற்றத்தால் முகத்துவாரம் உள்ள பகுதிகளில் கடல் மட்டம் உயர்ந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியுள்ளது. 

அதனை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் முகத்துவாரம் உள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. தடுப்புகள் அமைத்த சில மாதங்களிலே நிலத்தடி நீரின் தன்மை சீரடைந்துள்ளது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில் அந்த பகுதியில் முதலீடுகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார். 

மேலும் படிக்க | '₹' டூ 'ரூ'.. முதல்வர் ஸ்டாலின் நீங்கள் இவ்வளவு முட்டாளா? - அண்ணாமலை சரமாரி கேள்வி!

மேலும் படிக்க |  வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், கடை உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கை

மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 2 முக்கிய அறிவிப்புகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News