ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

TN Ration Card Update : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் உள்ளிட்ட குடும்ப அட்டை தொடர்பான புகார்களுக்கான உடனடி தீர்வு குறித்த முக்கிய அறிவப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 9, 2025, 11:02 AM IST
  • ரேஷன் கார்டு புகார்கள் இருக்கிறதா?
  • தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
  • கரூர் மாவட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

TN Ration Card Update News : தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்காக தமிழ்நாடு அரசு மாதம்தோறும் குறைதீர்ப்பு முகாம் கூட்டம் நடத்துகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இது தொடர்பான கூட்டம் நடைபெறும் நாள் குறித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேதியை அறிவிப்பார்கள். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல் அல்லது புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் குறித்த மனுக்களை கொடுக்கலாம். இதுதவிர வேறு ஏதேனும் ரேஷன் கார்டு தொடர்புடைய புகார்கள் இருந்தாலும் இந்த கூட்டத்தில் கொடுத்தால் உடனடி தீர்வு கிடைக்கும். அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு ரேஷன் கார்டு குறைதீர் முகாம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 1204,2025 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த தங்களின் புகார்களை கொடுக்கலாம்.

மேலும், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களையும் கொடுக்கலாம். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2013-இன் படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க குறை நிவர்த்தி செய்யும் பொருட்டு கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே, பொது மக்கள் மேற்படி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2013 தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இக்கூட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை ஆன்லைனில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து நீண்டநாட்களாக காத்திருப்பவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு விண்ணப்பம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பது குறித்து முறையிடலாம். அப்போது உடனடியான தீர்வு கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ரேஷன் அட்டை தொடர்பான புகார்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்வது சிறந்தது. வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள். மீண்டும் ஒருமாதம் காத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு வருமா? வராதா? முக்கிய அப்டேட்ஸ்

மேலும் படிக்க | ரேஷன் கார்டு இப்போது விண்ணப்பித்தால் எப்போது வரும்? முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News