)
TN SSLC Supplementary Exam Date: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை 9.30 மணிக்கு வெளியானது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை ஆன்லைனில் அவர் வெளியிட்டார். 2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6,271 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 7,081 மாணவர்களில் 6,271 பேர் தேர்ச்சி பெற்றார். தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 89 சதவீதமாகும்.
கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 3,165 (89.99) பேரும், மாணவர்கள் 3,115 பேரும் (87.25 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 2.63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 22 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாடவாரியாக பார்த்தால் தமிழ் பாடத்தில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதம் பாடத்தில் ஒருவரும், அறிவியல் பாடத்தில் மாணவர்கள், மாணவிகள் 6 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 5 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
மொத்தம் 13 மாணவர்கள் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 12 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றனர். தமிழகத்தில் 450 -500 மதிப்பெண்களை மொத்தம் 153 மாணவர்கள் பெற்றுள்ளனர். 401-450 மதிப்பெண்களை மொத்தம் 578 மாணவர்கள் பெற்றுள்ளனர். 351 - 400 மதிப்பெண்களை மொத்தம் 1,115 மாணவர்கள் பெற்றுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக பார்த்தால், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடத்தை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது. மாநில அளவில் 97.57 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று புதுக்கோட்டை மாவட்டம் முதலிடததை பெற்றுள்ளது. தொடர்ந்து, 97.54 சதவீதத்துடன் சிவகங்கை மாவட்டம் 2ஆம் இடத்தையும், 97.41 சதவீதத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும், 97.31 சதவீதத்துடன் திருச்சி மாவட்டம் 4ம் இடத்தையும், 97.30 சதவீதத்துடன் கன்னியாகுமரி 5ம் இடத்தையும் பெற்றுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும். இந்த நிலையில், 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 8ஆம் தேதி முதல் முதல் ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான விண்ணப்பம் மே 26ஆம் தேதி தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 9ஆம் தேதியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
10ஆம் வகுப்பு தேர்வு மறுகூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கும் தேதியும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மறுமதிப்பீடுக்கு ஜூலை 17ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களது மதிப்பெண்களில் திருப்தியற்ற மாணவர்கள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். மறு கூட்டலுக்கான கட்டணத்தை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும். மாணவர்கள் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மே 22ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
| தேர்வு | 10ம் பொதுத்தேர்வு முடிவுகள் |
| தேர்வு முடிவுகள் | மே 20 |
| தேர்ச்சி விகிதம் | 89 சதவீதம் |
| தேர்ச்சி பெற்றவர்கள் | 6,271 மாணவர்கள் |
| மாணவர்கள் தேர்ச்சி | 3,165 |
| மாணவிகள் தேர்ச்சி | 3,115 |
| முதலிடம் பிடித்த மாவட்டம் | புதுக்கோட்டை |
| துணைத் தேர்வு | ஜூலை 8 முதல் ஜூலை 15 வரை நடைபெறும் |
| துணைத் தேர்வு விண்ணப்பம் | மே 26 முதல் ஜூன் 9ஆம் தேதி வரை |
| மறு மதிப்பீடு | ஜூலை 17 முதல் ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம் |
| மதிப்பெண் சான்றிதழ் | மே 22 |