நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரபல பாடகர் கானா பாலா போட்டி
TN Election: சென்னை மாநகராட்சியின் திரு.வி.க. நகருக்கு உட்பட்ட புளியந்தோப்பு 72ஆவது வார்டில் கானா பாலா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.
நடைபெறும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைகிறது. திமுக கூட்டணி தவிர அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் என பல கட்சிகள் தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றன. இவர்களுடன் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் அவரவர் சொந்த பகுதியில் பிரபலமானவர்கள் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
சென்னையில் (Chennai) 94 வயது காமாட்சி அம்மாள் சுயேச்சையாக களமிறங்குகிறார். மற்றொருபுறம் கம்யூனிஸ்ட்கள் 21 வயதான கல்லூரி மாணவியை வேட்பாளராக களம் இறக்குகிறார்கள். திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் திருநங்கைகளுக்கு தங்களது கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்திருக்கின்றன. இந்த வரிசையில் பிரபல கானா பாடகர் பாலாவும் சுயேச்சையாக தேர்தலில் களம் காண்கிறார்.
ALSO READ | ஆளுநர் VS தமிழக அரசு: நீட் விவகாரத்தில் நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்..!
சென்னை மாநகராட்சியின் திரு.வி.க. நகருக்கு உட்பட்ட புளியந்தோப்பு 72ஆவது வார்டில் கானா பாலா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இவர் ஏற்கனவே இந்த வார்டில் போட்டியிட்டு 4000 வாக்குகளுக்கு மேல் பெற்றிருக்கிறார். ஆனால் வெற்றியை ருசிக்க முடியாமல் போயிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் முயற்சி செய்யும் விதமாக அதே வார்டில் போட்டியிடுகிறார் கானா பாலா.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் பிறந்த வளர்ந்த இந்த பகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறேன். இந்த முறை வெற்றிபெற்று அந்த தேவைகளை செய்து முடிப்பேன்" என்றார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் (Urban Local Body Election) பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் 22ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.
ALSO READ | 'இப்படி இருந்தால் எப்படி தாமரை மலரும்?': அண்ணா நினைவு நாள் விழாவில் டி.ராஜேந்தர்
ALSO READ | தேர்தலில் களமிறங்கும் திருநங்கைகள்: திராவிட கட்சிகளின் சமூக நீதிக்கு மற்றொரு சான்று
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR