Erode Sivagiri Double Murder Case: ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டை கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளோரின் பின்புலம் குறித்து மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
Erode Double Murder Case: நான்கு பேர் கைது
அப்போது பேசிய அவர், "ஈரோடு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஷ் ஆகியோரை கைது செய்தோம். மரக்கட்டையை வைத்து அடித்து கொலை செய்துள்ளார்கள். இறந்து போன ராமசாமியின் செல்போனை மாதேஷிடம் இருந்து கைப்பற்றினோம். மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளோம். நகைகளை உருக்கி கொடுத்த ஞானசேகரனையும் கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனங்களையும் நகையையும் பறிமுதல் செய்துள்ளோம். இறந்து போனவரின் செல்போனையும் கைப்பற்றியுள்ளோம்.
Erode Double Murder Case: கொலை செய்தது எப்படி?
இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஆச்சியப்பன் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் அடுத்த 2 பேரை விசாரித்தோம். மரக்கட்டையை கொண்டு இவர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர், கையுறையை பயன்படுத்தி உள்ளனர். குற்றம் நடந்த இடத்தில் இருந்த கால் பாத தடங்களை இவர்களின் பாதங்களுடன் ஒப்பீடு செய்துள்ளோம். ஞானசேகரன் உருக்கிய 82 கிராம் நகையை ஆச்சியப்பன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்துள்ளோம்.
Erode Double Murder Case: முதியவர்களை குறிவைக்க காரணம் என்ன?
2015ஆம் ஆண்டு முதல் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். பல்லடம் மூவர் கொலையிலும் தாங்கள் தான் ஈடுபட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆச்சியப்பன் தேங்காய் உரிக்கும் வேலை என்பதால் தோட்டத்தை நோட்டம் விட்டு கொலை, கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ரமேஷ், மாதேஷ் உடனிருந்து செயல்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கைது செய்யப்படவர்களிடம் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணை நடைபெறும். காவல்துறையின் காவலில் அவர்களை எடுத்து விசாரிப்போம். கொள்ளையில் நகை மட்டுமே எடுத்துள்ளதாகவும் பணத்தை எடுக்கவில்லை எனவும் குற்றவாளிகள தெரிவித்துள்ளனர். வயதானவர்களை கொலை செய்தற்கு காரணம் வெளியில் சொல்லாமல் இருக்கவே கொலை செய்துள்ளனர்.
Erode Double Murder Case: 2015ஆம் ஆண்டு முதல்...
பல்லடம் கொலையில் தோட்டத்தில் தேங்காய் உரிக்கும் போது முதியவர்கள் தனியாக இருப்பதை அறிந்து கொலை செய்துள்ளனர். ஏப்ரல் 28ஆம் தேதியே ராமசாமி - பாக்கியம் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றம் செய்யும் போது அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதில்லை.
சென்னிமலை கொலையிலும் சாட்சியங்கள் அடிப்படையில் விசராணை நடைபெறும். மக்களை பீதி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்புவது குற்றம். 2015ஆம் ஆண்டே 5 வழக்குகளில் இவர்கள் சிறையில் 9 மாதங்கள் இருந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 10 சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக ஒப்புதல் அளித்துள்ளனர். பொதுமக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில், காவல்துறை ரோந்து பணியில் ஈடுபடும். குற்றவாளிகள் சுடப்படுவார்களா என்பதற்கு காவல்துறை சட்டப்படியான நடவடிக்கை தான் எடுக்க முடியும்" என்றார்.
Tamil Nadu Crime News: 3 கொலை சம்பவங்கள்
ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்த வயதான தம்பதி ராமசாமி - பாக்கியம் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதை போல், 2024ஆம் ஆண்டில் பல்லடம் அருகேவும், 2023ஆம் ஆண்டில் சென்னிமலை அருகேவும் கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த மூன்றிலும் முக்கியமான தொடர்பு என்னவென்றால், மூதியவர்களை குறிவைத்தே கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. மூன்று சம்பவங்களின்போதும் வீட்டின் வளர்ப்பு நாய்கள் கொல்லப்பட்டிருந்தன. தற்போது சிவகிரி இரட்டை கொலை, பல்லடம் மூவர் கொலை ஆகியவற்றை கைதானவர்களே குற்றத்தை புரிந்துள்ளனர். சென்னிமலை சம்பவம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | சாலையில் ராட்சத பள்ளம் - சிக்கிய கார் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
மேலும் படிக்க | ஜெர்மன் படிக்க ஆசையா? தமிழக அரசின் இலவச பயிற்சி... முடித்தால் ரூ.2 லட்சம் சம்பளம்!
மேலும் படிக்க | அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ