)
tnea rank list 2025 : தொழில்நுட்ப கல்வி இயக்கம் சென்னை பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 2025 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. மாணவ, மாணவிகள் தங்கள் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும்போது கொடுக்கப்பட்ட ஜிமெயில், மொபைல் எண் கொடுத்து https://www.tneaonline.org/ வெப்சைட்டில் தங்களுடனை தரவரிசைப் பட்டியலை பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவ, மாணவிகள் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடப்பிரிவுகளில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2,39, 999 மாணவ, மாணவிகளுக்கு பொறியியல் கலந்தாய்வு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 200க்கு 200 கட்ஆப் எடுத்த 141 மாணவ, மாணவிகளுக்கு இடங்கள் 1 முதல் 141 வரையிலான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
இப்போது வெளியிடப்பட்டிருக்கும் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில் மாணவர்களின் விண்ணப்ப எண், பெயர், பிறந்த தேதி, 200 பெற்ற கட்ஆப் மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு வாரியாக பெற்ற தரவரிசை பட்டியல் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். https://www.tneaonline.org/ என்ற வெப்சைட்டில் சென்றதும் இடது புறம் முதலில் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் தரவரிசை இருக்கும். அதன்பிறகு மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைப்பிரிவினரின் மாணவ, மாணவிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், அரசுப் பள்ளி மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் இருக்கும்.
தரவரிசை பார்ப்பது எப்படி?
இதுதவிர அரசுப் பள்ளியில் படிக்கும் முன்னாள் படைப்பிரிவினர், அரசுப்பள்ளியில் விளையாட்டு துறை பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இருக்கும். இந்த தரவரிசைப் பட்டியலில் குறைகள் ஏதும் இருந்தால் 28 ஆம் தேதி முதல் ஜூலை 2 ஆம் தேதிக்குள் சேவை மையங்கள் வழியாக சரி செய்து கொள்ளலாம். அரசுப் பள்ளியில் பயின்ற முன்னாள் படை வீரர், மாற்றுத் திறனாளி, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 7 மற்றும் ஜூலை 8 ஆம் தேதிகளில் நடக்க உள்ளது. பொதுப்பிரிவு முன்னாள் படை வீரர், மாற்றுத் திறனாளி, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 9 ஆம் தேதி முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை நடக்க உள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகள்
பொதுக்கல்வி கலந்தாய்வு அதாவது, பொதுக்கல்வி, தொழில்முறை கல்வி, அரசுப் பள்ளி 7.5 விழுக்காடு கலந்தாய்வு ஜூலை 14 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. எஸ்சிஏ, எஸ்சி வகுப்பினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25,26 ஆம் தேதிகளில் நடக்க உள்ளது. கலந்தாய்வு இறுதி நாள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ