TNEA Rank List 2025 : தமிழ்நாடு பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல் - கலந்தாய்வு எப்போது?

Tamil Nadu Engineering Admission TNEA Rank List : பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று வெளியிட்டார்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jun 27, 2025, 11:38 AM IST
  • பொறியியல் படிப்பு கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல்
  • தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார்
  • மாணவர்களுக்கான முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
TNEA Rank List 2025 : தமிழ்நாடு பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல் - கலந்தாய்வு எப்போது?

Tamil Nadu Engineering Admission TNEA Rank List :  12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்புகளை சேர விண்ணப்பித்தனர். அவர்களின் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. எதிர்பார்த்தைதைப் போலவே உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். 145 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் பயின்ற 7.5% இடஒதுக்கீட்டில் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தரவரிசை எண் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தரவரிசை எண்ணை தெரிந்து கொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source

மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் இட ஒதுக்கீடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. https://www.tneaonline.org/ என்ற வெப்சைட்டில் சென்றதும் இடது புறம் முதலில் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் தரவரிசை இருக்கும். அதன்பிறகு மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைப்பிரிவினரின் மாணவ, மாணவிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், அரசுப் பள்ளி மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல்  இருக்கும். இதுதவிர அரசுப் பள்ளியில் படிக்கும் முன்னாள் படைப்பிரிவினர், அரசுப்பள்ளியில் விளையாட்டு துறை பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இருக்கும். 

இந்த  தரவரிசைப் பட்டியலில் குறைகள் ஏதும் இருந்தால் 28 ஆம் தேதி முதல் ஜூலை 2 ஆம் தேதிக்குள் சேவை மையங்கள் வழியாக சரி செய்து கொள்ளலாம். அரசுப் பள்ளியில் பயின்ற முன்னாள் படை வீரர், மாற்றுத் திறனாளி, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 7 மற்றும் ஜூலை 8 ஆம் தேதிகளில் நடக்க உள்ளது. பொதுப்பிரிவு முன்னாள் படை வீரர், மாற்றுத் திறனாளி, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 9 ஆம் தேதி முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. 

பொதுக்கல்வி கலந்தாய்வு அதாவது, பொதுக்கல்வி, தொழில்முறை கல்வி, அரசுப் பள்ளி 7.5 விழுக்காடு கலந்தாய்வு ஜூலை 14 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. எஸ்சிஏ, எஸ்சி வகுப்பினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25,26 ஆம் தேதிகளில் நடக்க உள்ளது. கலந்தாய்வு இறுதி நாள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஆகும்.  

மேலும் படிக்க | கூமாப்பட்டி : குட் நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு! கலெக்டர் அறிவிப்பு இதோ

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இந்த தேதியில் ரூ.1000 கிடைக்கும்! புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News