டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான அப்டேட்! தமிழ்நாடு அரசின் புதிய இணைய தளம்..!!

TNPSC : ஆறுகளில் நிர்வரத்து முன்னறிவிப்புகளை செயற்கைக்கோள் வழியாக தெரிவிக்கும் புதிய இணையதளங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jul 4, 2025, 07:16 AM IST
  • டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான அப்டேட்
  • தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள புதிய இணையதளம்
  • நீர்வளத்துறை இணையதளத்தின் முக்கிய அம்சங்கள்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான அப்டேட்! தமிழ்நாடு அரசின் புதிய இணைய தளம்..!!

TNPSC : தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை செயற்கைகோள் மூலம் கண்காணிப்பது, நீர்நிலைகள் தொடர்பான முன்னறிவிப்பு, பாதுகாப்பு, நீர்நிலைகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை தெரிவிக்கும் புதிய சேவையை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்தியாவிலேயே இதை செய்திருக்கக்கூடிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்த சேவை மூலம் மாநிலத்திலுள்ள அனைத்து ஆற்றுப் படுகைகளிலும் நீர்வரத்து முன்னறிவிப்பு மாதிரியை தானியங்கி முறையில் தெரிந்து கொள்ளலாம். அனைத்து தரப்பு நீர் தேவைகளை அறிதல், மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களுக்கும் நீர்தேக்கம் இருப்பு தகவல், குறிப்பிட்ட இடம் சார்ந்த நீர் சம்மந்தமான விவரங்களை வழங்க மொபைல் புவி-நுண்ணறிவு சார்ந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Add Zee News as a Preferred Source

தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு (TNWRIMS)

தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பிற்கான (Tamil Nadu Water Resources Information and Management System) இணையதளத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. இந்த இணையதளம் நீர் தொடர்பான தரவுத்தளத்திற்கான ஒற்றை ஆதாரமாக நம்பகத் தன்மையுடன் இந்த இணையதள அமைப்பு செயல்படும்.
தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பானது நீர்வளத்துடன் தொடர்புடைய அனைத்து தரவுகளையும் ஒரே கட்டமைப்பில் ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் அதிகாரப்பூர்வ தீர்வாக இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, நீர் விநியோகம், தேவைகள், செயல்பாடு மற்றும் சுற்றுச்சூழல் கூறுகளை உள்ளடக்கியவாறு, நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர் ஆதாரங்களான நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், சிறுபாசன ஏரிகள் போன்றவைகளின் நேரடி போன்றவைகளின் நேரடி கண்காணிப்பு மற்றும் முடிவெடுத்தல் ஆதரவைக் கையாளும் திறன் கொண்டதாகும்.

TNWRIMS-6OT செயல்திட்ட பணிகள் 26.10.2022 தொடங்கப்பட்டது. மத்திய நீர் வள ஆணையம் (CWC), இந்திய வானிலை மையம் (IMD), இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO), மாநில மற்றும் உலகளாவிய தரவுகள் (State and Global Data) ஆகியவற்றிலிருந்து தரவுகளை ஒருங்கிணைத்து, நிகழ்நேரத் தகவலைக் கொண்டு, இந்த ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு (Real time Dashboards modules) செயல்படும். நிகழ்நேரத் தகவலை அளித்திடும் இந்த அமைப்பில் நீர் வழங்கல், தேவை, தரம், பயனர்கள் போன்றவை, நீர் தணிக்கை, கிராம தண்ணீர் வரவு செலவு, வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவரம், நீர்வரத்து முன்னறிவிப்பு, நீர்த்தேக்க செயல்பாடு மேம்படுத்தல், நீர் பற்றாக்குறை தகவல், நிலத்தடி நீர் தகவல், திட்ட கண்காணிப்பு மற்றும் மேலாண்மை, ஆற்றுப்படுகைகளுக்கிடையே நீர் பரிமாற்றம், நீர் பாதுகாப்பு திட்டம் போன்ற 11 தொகுதிகள் உள்ளன. இந்த இணையதள பதிவு மற்றும் தரவுகள் இடம் பெயர்வுக்கான பணிகள், தமிழக அரசு நீர்வளத்துறை இணையதளத்தில் (http://tnwrims.tn.gov.in) இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு செயற்கைக்கோள் அடிப்படையிலான நீர்நிலைகளின் தகவல், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு (Tamil Nadu Satellite based Water Bodies Information Monitoring and Protection System). செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள் மூலம் புதிய தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நீரின் தரத்தை கண்காணிக்க இணையதளம் உருவாக்குவதற்காக 3 கோடியே 55 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நீண்டகால, எளிதாகக் கிடைக்கும் செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி, வருவாய்த் துறை ஆவணங்களில் வரையறுக்கப்பட்ட நீர்நிலைப்பகுதியின் அளவீடு மூலம் நீர்நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்பு / அத்துமீறல் போன்றவை செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளைப் பயன்படுத்தி கண்டறிந்திடலாம். இத்தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, பரப்பளவில் ஏற்படும் மாற்றங்களால் நீர்நிலைகளின் கொள்ளளவு இழப்பை கண்டறியலாம், நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு நீர்நிலைகளில் உள்ள புல எண்களில் ஏற்படும் மாற்றம் குறித்த விழிப்பூட்டல் தகவல்களை அனுப்பி, ஆக்கிரமிப்பை அகற்றும்பணியை செயல்படுத்தும் முன்னோடி திட்டமாக, அம்பத்தூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை கண்டறியும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள நீரின் தரத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உணரி (Sensor) நிறுவப்பட்டு நீரின் தரம், குறிப்பிட்ட அளவுகள் மற்றும் மதிப்புகள் இணையதளத்தில் (http://tnswip.tn.gov.in) நிகழ்நேரத்தில் தெரிவிக்கப்படுகின்றது. பூண்டி நீர்த்தேக்கத்தில் வண்டல் மண் படிவு கணக்கீட்டுக்காக பேத்மெட்ரிக் மற்றும் ஆளில்லா விமானம் மூலம் தரவுகள் பெறப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சென்னையில் அரசு அலுவலகத்தில் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்..!!

மேலும் படிக்க | கள்ளச்சாராயம் காய்ச்சி மனம் திருந்தியவர்களுக்கு ரூ.50,000 - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News