TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கிறீங்களா? தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

TNPSC Exam Preparation: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிப்பவர்களுக்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு ஒரு குட் நியூஸ் வெளியிட்டுள்ளது. அது என்ன என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 8, 2025, 09:58 AM IST
  • டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கிறீங்களா?
  • திண்டுக்கல் மாவட்ட இளைஞர்களுக்கு குட்நியூஸ்
  • கட்டணமில்லா இலவச படிப்பகம் திறப்பு
TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கிறீங்களா? தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Free TNPSC coaching Tamil Nadu : தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கின்றனர். அவர்களுக்கு தம்ழிநாடு அரசு சார்பில் நூலகங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம். காளாஞ்சிப்பட்டி கிராமம். கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB போட்டிக் கேர்வுக்கான யிற்சி வழங்க தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், TNPSC. SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம். காளாஞ்சிப்பட்டி கிராமம். கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் 200 ஆர்வலர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் முற்பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.

பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக 11.03.2025 முதல் 25.03.2025 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04583 - 291269 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு. ஆர்வலர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க | TNPSC Syllabus : டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் தொடர்பான முக்கிய அப்டேட்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News