TNPSC Group 1 Exam Free Coaching: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதுவும் அரசு சார்பில் இந்த பயிற்சி வகுப்புகள் இலவசமாகவே நடத்தப்பட உள்ளன. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்வோம்.
இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSCGr-1 தேர்க்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும் என அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் 70 காலிப்பணிக் காலியிடங்களுக்கான TNPSC Group I அறிவிப்பு 0104-2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது, இதற்கானதேர்வு 15.06.2025 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான இலவசபயிற்சி வகுப்புகள்கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும்மையத்தில் 0104.2025 முதல் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில்நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் காற்றோட்டமான அறை குடிநீர்வசதி, Smart Board, இலவச Wifiவசதி . அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தங்கள்அடங்கிய நூலகவசதி, பொதுஅறிவுக்கான மாத இதழ்கள், பயிற்சிகால அட்டவணை, நாள்தோறும் சிறு தேர்வுகள், மென்பாடக் குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணினி வசதி என அனைத்து வசதிகளுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சிமையத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட TNPSC.Gr-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்வருவாய்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் பயிற்சிபிரிவு, மருத்துவதுறை போன்ற பல்வேறு அரசுத்துறைகளில் பணிநியமன ஆணைபெற்றுள்ளனர். TNPSC G4 போட்டித்தேர்வினை சிறந்த முறையில் எழுதி வெற்றிபெற வழிவகுக்கும் வகையில், மாதிரிதேர்வுகள் ஒவ்வொரு புதன்கிழமையும், வாரத்தேர்வுகள்ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் உடனடியாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் நேரடியாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாய்ப்பினை TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீதங்கவேல், இஆப. அவர்கள் தெரிவிக்கின்றார். மேலும்விவரங்களுக்கு 04324- 223555, 9499055912 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









