TNPSC Group 1 Free Coaching Tamilnadu Government : தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு படித்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு முழுவதும் நூலகங்கள் மற்றும் படிப்பகங்கள் அமைத்துக் கொடுத்து தேர்வுக்கு தயாராவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுகிறது. அத்துடன் படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் ஆகியவற்றையும் இலவசமாக நூலகங்களில் பயன்படுத்த அனுமதிக்கிறது. அதுமட்டுமில்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேர்வுக்கு தயாராவதற்கு ஏற்ப இலவச பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறது. இப்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், போட்டிதேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. TNPSC Group 1 Preliminary தேர்வுக்கான பயிற்சி வகுப்பு (26.03.2025 முதல்) சென்னை கிண்டியில் நடக்க உள்ளது. TNPSC GROUP முதல்நிலை போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளானது திங்கள் வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகின்றது. பயிற்சி வகுப்பின் நேரம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை. எனவே, TNPSC GROUP I முதல்நிலை போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் பயிற்சி துறையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை முகவரிக்கு செல்லலாம். தொலைபேசி எண்: 044- 22500134, 9361566648
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு இலவச பயிற்சி - தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









