)
TNPSC Group 1 guidelines : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட 70 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூன் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 8 முக்கிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இந்த முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் ஏற்கனவே tnpsceexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தங்களின் விண்ணப்ப பதிவெண் உள்ளிட்ட தகவல்களை கொடுத்து தேர்வர்கள் ஹால் டிக்கெட் டிவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இந்த சூழலில் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. 15.06.2025 முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி-I மற்றும் தொகுதி-IA பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரைகள்.
1. விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். காலை 09.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
2. விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். தவறினால் அவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டை / கடவுச்சீட்டு(PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் (PAN CARD) / வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டு வர வேண்டும்.
3. தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம்(Electronic Watches), புளூடூத்(Bluethooth) போன்ற மின்னணு உபயோகப்பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை.
4. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மூலம் தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் சிறப்பு பேருந்து வசதிகள் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேர்வர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ