)
TNPSC Group 4 exam instructions 2025 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு ஜூன் 12 ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது. மொத்தம் 3 ஆயிரத்து 935 காலிப் பணியிடங்களுக்கு இம்முறை இந்த தேர்வை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் எழுதுகிறார்கள். அதாவது சராசரியாக ஒரு இடத்துக்கு 353 பேர் போட்டி போடுகின்றனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் அண்மையில் டிஎன்பிஎஸ்சி வெப்சைட்டில் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வாணையம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் தேர்வாணைய அறைக்குள் என்னென்ன பொருட்களை எல்லாம் தேர்வர்கள் கட்டாயம் எடுத்துச் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள்
அலைபேசி (Mobile Phone), அகவி (Pager) அல்லது ஏதேனும் மின்னணு கருவி அல்லது நிரலாக்கம் செய்யப்பட்ட சாதனங்கள் (Programmable Devices) அல்லது விரலி (Pendrive), திறன் கைக்கடிகாரம் (Smart Watches) போன்ற சேமிப்பு மின் ஊடகம் (Storage Media), குறிப்பு நினைவகங்களை (Memory Notes) உள்ளடக்கிய கைக்கடிகாரம் மற்றும் குறிப்பு நினைவகங்களை உள்ளடக்கிய மோதிரம், இன்னும் பிற அல்லது புகைப்படக்கருவி அல்லது ஊடலை கருவிகள் (Bluetooth Devices) அல்லது தகவல் தொடர்பு சில்லுகள் (Communication Chips) கொண்டுவரக்கூடாது.
வேறு ஏதேனும் சாதனங்கள் அல்லது தகவல் தொடர்பு சாதனமாக பயன்படுத்தத்தக்க துணைக் கருவிகள் செயல்பாட்டிலோ அல்லது அணைக்கப்பட்ட நிலையிலோ தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் கொண்டுவர அனுமதியில்லை. P&G தரவுப் புத்தகம், கணிதம் மற்றும் வரையும் கருவிகள், மடக்கை அட்டவணைகள், படியெடுக்கப்பட்ட வரைபடங்கள், புத்தகங்கள், நகரி (Slide Rules), குறிப்புகள், கையேடுகள், தாள்கள் (Loose Sheets and Rough Sheets), கைப்பைகள் போன்றவற்றையும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் கொண்டுவர அனுமதியில்லை.
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாது
அவ்வாறான தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது கருவிகள் வைத்திருப்போர்கள் கண்டறியப்பட்டால், தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படுவதுடன் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும், மேலும், தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவர். தேவை எனக் கருதப்படின் அவ்விடத்திலேயே சோதனைக்கு (உடற்சோதனை உட்பட) உட்படுத்தப்படுவர். தேர்வர்கள் அவர்களின் சொந்த நலன் கருதி கைப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களைத் தேர்வு கூடத்திற்கு எடுத்துவரவேண்டாம் என அறிவுறுத்தப்படுவதுடன் அப்பொருட்களின் கொள்ளப்படுகிறது. பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி பொறுபேற்காது
தேர்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் தேர்வரின் தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் மிகவும் கவனமாக இருக்குமாறு தேர்வர்களைத் தேர்வாணையம் எச்சரிக்கிறது. இது போன்ற தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் தேர்வர்களுக்கு ஏற்படும் எவ்வித இழப்புக்கும் தேர்வாணையம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.
எனவே, இந்த விதிமுறைகளை கருத்தில் கொண்டு தேர்வர்கள் சிறப்பாக தேர்வு எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி காலிப் பணியிடங்கள் விவரம்
கிராம நிர்வாக அலுவலர் - 215, இளநிலை உதவியாளர் - 1,621, இளநிலை உதவியாளர் - 11, இளநிலை உதவியாளர் - 46, இளநிலை வருவாய் ஆய்வாளர் - 239, ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (அலுவலகம்) – 1, இளநிலை அசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட் - 2, தட்டச்சர் - 1,100, ஸ்டெனோ டைப்பிஸ்ட் (கிரேடு - III) – 368, தனிப்பட்ட எழுத்தர் - 2, உதவியாளர் - 54, கள உதவியாளர் - 19, வனக் காவலர் - 62, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காவலர் - 35, வனக் கண்காணிப்பாளர் - 71, வனக் கண்காணிப்பாளர் (பழங்குடி இளைஞர்) - 24, வனக் காவலர் - 15 (கூடுதல் பட்டியல்), வனக் கண்காணிப்பாளர் - 50
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ