TNPSC Group 4 Counselling Update: TNPSC Group 4 Counselling Update: குரூப் 4 தேர்வு 3ம் கட்ட கலந்தாய்வுக்கான தேதி குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குரூப் 4 மூன்றாம் கட்ட கலந்தாய்வு மே 8ஆம் தேதி நடைபெறும் என்றும் இதற்கு பிறகு மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

TNPSC Group 4 Update: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. கைநிறைய சம்பளம், நிரந்தரமான வேலை போன்ற காரணங்களால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பல லட்சம் பேர் தயாராகி வருகின்றனர். இதற்காகவே டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் குரூப் வாரியாக தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குர்ப 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. மேலும், அவ்வப்போது முக்கியமான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது குரூப் 4 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
குரூப் 2 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரைவாளர், நில அளவையார் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. குரூப் 4 தேர்வு 10ஆம் வகுப்பு கல்வித்தகுதியை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2025 ஜூலை மாதத்தில் நடைபெற்றது. குரூப் 4 தேர்வு மூலம் 4,662 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகளும் ஜூலையில் நடந்தது. இந்த தேர்வில் மூலம் கட் ஆப் அடிப்படையில் தேர்வு செய்யப்ட்டு, அவர்களுக்கு இரண்டு கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்துள்ளன. தற்போது மூன்றாம் கட்ட கலந்தாய்வு குறித்து முக்கியமான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இதுகுறீத்து வெளியிட்ட அறிவிப்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 (தொகுதி IV) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் 22.10.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வின் முடிவில் உள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிறபதவிகள், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 08.05.2026 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எண்.3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை-600 003-ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேற்குறிப்பிட்ட மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ