)
TNPSC Group 4 Exam: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கு மாநிலம் முழுவதும் மாவட்டவாரியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து தமிழ்நாடு அரசு வேலையை கனவாக கருதி படிப்பவர்களுக்கு அனைத்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை கொடுக்கின்றன. இந்த சூழலில் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தென்காசியில் தொடங்க உள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச பயிற்சி
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ; தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சார்பாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கதவு எண்.168, முகமதியா நகர் (KFC கடை பின்புறம்), குத்துக்கல் வலசை அஞ்சல் என்ற முகவரியில் நடைபெற்று வருகிறது.இந்தத மையத்தில் TNPSCGROUP.II/IV தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ/மாணவியர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
எப்படி கலந்து கொள்வது?
தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் பல்வேறு தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா புதிய நேரடி பயிற்சி வகுப்புகள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக 12.11.2025 முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு Smart Board வசதியுடன் நடத்தப்படுகிறது. மேலும் தேர்வர்கள் பயன் பெறும் வகையில் மாதிரி தேர்வுகள் நடைபெறும்.
தென்காசி மாவட்ட டெலிகிராம் சேனல்
இந்த வகுப்பில் கலந்து கொள்ள bit.ly/tnpscnew2025 என்ற இணைப்பில் பதிவு செய்ய வேண்டும். மேலும் கதவு எண் 168, முகமதியா நகர் (KFC பின்புறம்), குத்துக்கல்வலசையில் அமைந்துள்ள தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 12.11.2025 அன்று காலை 10:00 மணிக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு Tenkasi Employment Office என்ற Telegram Channel வாயிலாகவும், 04633-213179 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ