)
TNPSC Group 4 Exam Free Mock Test 2025 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூலை 12 ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வு நடக்கிறது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதி என்பதால் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுகளை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. இந்த சூழலில் நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த மாவட்டத்தில் இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC Group-IV தேர்விற்கான முழு மாதிரித்தேர்வுகள் நடைபெறவுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC Group-IV போட்டித்தேர்விற்கு மாநில மாநில அளவில் இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்கள் விடுப்பு நாட்கள் அல்லது வார இறுதிகளில் மாதிரித்தேர்வுகள் எழுத விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, TNPSC Group-IV தேர்விற்கான முழு மாதிரித்தேர்வுகள் 21.06.2025, 28.06.2025 மற்றும் 05.07.2025 ஆகிய நாட்களில் காலை 09.30 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தேர்வில் அதிக அளவிலான நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக TNPSC & TNUSRB போன்ற போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிக அளவில் பங்கு பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது TNPSC தொகுதி IV மற்றும் TNUSRB SI ஆகிய தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4 தேர்விற்கான அறிவிக்கை 25.04.2025 அன்று வெளியிடப்பட்டு, தேர்வு 12.07.2025 அன்று நடைபெற உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
இத்தேர்விற்கு தயாராகி வரும் போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4 தேர்விற்கான மாநில அளவில் இலவச மாதிரித் தேர்வு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் எதிர்வரும் 21.06.2025, 28.06.2025 மற்றும் 05.07.2025 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4 தேர்விற்கான மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 20.06.2025 க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ