TNPSC Group 4 Notification 2025 : 2025 ஆம் ஆண்டிற்கான TNPSC குரூப் 4 அறிவிப்பு, காலியிடங்கள், விண்ணப்ப காலக்கெடு மற்றும் தேர்வு தேதி பற்றிய விவரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. கிராமப்புற நிர்வாக அதிகாரி, ஜூனியர் உதவியாளர், தட்டச்சர் மற்றும் ஸ்டெனோ போன்ற பல்வேறு பதவிகளுக்கு 3,600 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ள நிலையில், 10 ஆம் வகுப்பு தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 25 முதல் மே 24, 2025 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு ஜூலை 12, 2025 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Notification 2025 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வுகளை நடத்துகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி 2025 குரூப் 4 அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 2025ம் ஆண்டிற்கான ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு இன்று (25.04.2025) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் 25.04.2025 முதல் 24.05.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு 12.07.2025 அன்று நடைபெறும். 2018 முதல் 2025 வரையுள்ள 8 ஆண்டுகளில், முதன்முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி IV பணிகள்) மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), 2022-ம் ஆண்டு அறிவிக்கையில் மூன்று நிதியாண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024ம் ஆண்டு அறிவிக்கையில், இரண்டு நிதியாண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், ஆக மொத்தம் ஐந்து நிதியாண்டுகளுக்கு 17739 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 3560 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- IV (தொகுதி IV பணிகள்) மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 3678 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3580) ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டில் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
மேலும், 2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது. கல்வித் தகுதியை பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். 21 வயதை எட்டியிருக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ