)
TNPSC Group 4 Result 2025 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2025 ஜூலை 12 ஆம் தேதி நடந்து முடிந்தது. சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்து 11 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதியிருக்கின்றனர். தேர்வு முடிவுகள் அதிகபட்சம் 70 நாட்களுக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் பேசும்போது, கடந்த ஆண்டைக் காட்டிலும் முன்கூட்டியே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கூறினார். அவர் கூறியடி பார்த்தால் செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் ரிசலட் வரும் என குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
குரூப் 4 தேர்வு 2025 ரிசல்ட் எப்போது வரும்?
ஆனால், செப்டம்பர் மாதம் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வர வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால், குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு செப்டம்பர் 28 ஆம் தேதி நடக்கிறது. அதற்காக குரூப் 4 தேர்வு எழுதியவர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். டிகிரி தரத்தில் இந்த தேர்வு நடைபெற்றாலும், குரூப் 4 தேர்வு எழுதியவர்களில் சரிபாதிக்கும் மேல் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு எழுத உள்ளனர். அதனால், குரூப் 4 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வந்தால் அந்த தேர்வர்களுக்கு பெரும் சங்கடமாக அமையும். இது அவர்களின் படிப்பை நேரடியாக பாதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
அதனால் இதனை டிஎன்பிஎஸ்சி நிச்சயமாக கருத்தில் கொள்ளும். மேலும், குரூப் 4 தேர்வு 2025 முடிவுகளையும் அக்டோபர் முதல் வாரத்திலேயே வெளியிடும். அதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கின்றன. எனவே, குரூப் 2 தேர்வுகளுக்கு இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்கள், குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து கருத்தில் கொள்ளாமல் குரூப் 2 தேர்வுக்கான படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தவும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு
டிஎன்பிஎஸ்சி பொறுத்தவரை குரூப் 4 பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை குறைவாக அறிவித்திருப்பது போலவே, குரூப் 2 காலிப் பணியிடங்களையும் மிக குறைவாகவே அறிவித்திருக்கிறது. இது தேர்வர்கள் மத்தியில் ஒருவிதமான அதிருப்தியை உண்டாக்கியிருந்தாலும் கலந்தாய்வுக்கு முன்னர் இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனை டிஎன்பிஎஸ்சியும் குருப் 2 தேர்வுக்கான அறிவிப்பில், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் காலிப் பணியிடங்கள் தோராயமானதே என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. எனவே, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிப்பவர்கள் காலிப் பணியிடங்கள் குறித்தும், குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்தும் கவனத்தை செலுத்தாமல், தற்போது நீங்கள் தயாராகிக்கொண்டிருக்கும் தேர்வு மீது முழு கவனத்தையும் செலுத்துங்கள். கண்டிப்பாக ரிசல்ட் நீங்கள் எதிர்பார்ப்பது போலவே நன்றாக இருக்கும்.
குரூப் 4 தேர்வு 2025 அதிகாரப்பூர்வ விடைகள்
இன்னும் பலர் டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் மிக கடினமாக இருந்ததாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சிக்கு பல வழிகளில் தங்களின் குமுறலை வெளிக்காட்டியுள்ளனர். இதையெல்லாம் டிஎன்பிஎஸ்சி கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது. விரைவில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட உள்ளது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு இந்த விடைகள் வெளியாகும். அந்த நேரத்தில் குரூப் 4 வினாத்தாள் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு முழு விளக்கமும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் கொடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ