கிளாம்பாக்கம் போகவே வேண்டாம்... பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் கொடுத்த தமிழக அரசு

Tamil Nadu Special Buses: முகூர்த்த நாள், வாரஇறுதி விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Written by - Umabarkavi K | Last Updated : Nov 14, 2025, 10:01 AM IST
  • வார இறுதி நாட்கள்
  • சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  • தமிழக போக்குவரத்து கழகம் ஹேப்பி நியூஸ்
கிளாம்பாக்கம் போகவே வேண்டாம்... பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் கொடுத்த தமிழக அரசு

TNSTC Special Buses Latest News: தலைநகர் சென்னையில் வேலை நிமித்தாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக, வார இறுதி நாட்களிலும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், வெள்ளிக்கிழமை மாலை முதலே பேருந்துகள், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டண விலை அதிகமாக இருப்பதால், பயணிகள் தமிழக அரசு பேருந்துகளிலே பயணிக்க விரும்புபவார்கள்.

Add Zee News as a Preferred Source

வார இறுதி நாட்கள்

இதனால், பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும். பயணிகள் கூட்ட நெரிசலின்று செல்வதற்கு ஏதுவாக, தமிழக போக்குவரத்து கழகம் வாரந்தோறும் வழக்கம் இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில், தற்போதும் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.

அதாவது, முகூர்த்தம் மற்றும் வாரஇறுதி நாட்களையொட்டி, தமிழக போக்குவரத்து இன்று (நவம்பர் 14) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, நவம்பர் 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நவம்பர் 15ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் நவம்பர் 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்து சென்னை நோக்கியும் அதிகப்படியான பயணிகள் திரளின் தேவைக்கேற்ப தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சென்னையின் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நவம்பர் 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 340 பேருந்துகளும், நவம்பர் 15ஆம் தேதி (சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னையின் கோயம்பேட்டிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் நவம்பர் 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரமிருந்து நவம்பர் 14,15ஆம் தேதிகளில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக் கிழமை, சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வரும் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,227 பயணிகளும், சனிக்கிழமை 2,975 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 7,563 பயணிகளும் பணி முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்தும் இயக்கம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். பயணிகள் பேருந்துளில் முன்பதிவு செய்ய TNSTC அல்லது TNSTC செயலி மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மின் இணைப்பில் பெயர் மாற்றம் ஜஸ்ட் 5 நிமிடங்களில் செய்யலாம்? எப்படி? கட்டணம் எவ்வளவு? முழுவிவரம்

மேலும் படிக்க: SIR படிவத்தை நிரப்ப... 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்கள் தேவைப்படுகிறதா? - ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News