)
TNTET Exam 2025 Date Changed : ஆசிரியர் தகுதித்தேர்வு, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியமானது வெளியிட்டிருந்தது. ஆசிரியர் கனவுடன் காத்திருக்கும் பலர், இந்த தேர்வை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், தேர்வு தேதியை தள்ளி வைத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்வு தேதி ஒத்திவைப்பு:
2025ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு`தேதி, முதலில் நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நிர்வாக காரணங்களுக்காக, நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தக்தி தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இந்த ஆண்டின் தகுதி ஆசிரியர் தேர்வானது அறிவிக்கப்பட்டபோது அது பெரும் பேசு பொருளாக மாறியது. காரணம், அரசு முந்தைய தேர்வு தேதியை அறிவித்த உடனேயே, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், அந்த தேதியில் நடக்கும் பண்டிகை ஒன்றினை சுட்டிக்காட்டினர்.
கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறை திருநாள் அந்த தேதிதான் என்றும், அந்த தேதியில் தேர்வினை வைக்க கூடாது என்றும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இதற்கு வலியுறுத்தினார்.
2 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தேர்வு:
TNTET தேர்வானது, 2013, 2014, 2017 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்டன. இதையடுத்து, 2023ல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தாலும், தேர்வுகள் 2024ல் நடத்தப்பட்டு முடிவுகள், இந்த ஆண்டில்தான் வெளியாகின. 2025 ஜூலை மாதத்தில்தான், மாநில அரசு 2,457 இடைநிலை ஆசிரியர்களை அரசுப்பள்ளியில் நியமித்திருந்தது. எனவே, இந்த ஆண்டில் நடக்கும் தேர்வானது 2 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தேர்வாக கருதப்படுகிறது.
இந்த தேர்வில் தாள்-IIக்கு B.E முடித்த பட்டதாரிகளும், B.ed படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ப, தேர்ச்சி மதிப்பெண்களானது மாறுபடும். பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றும், இட ஒதுக்கீடு பெறும் பிரிவை சேர்ந்தவர்களுக்கு 5% தளர்வு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.trb.tn.gov.in என்கிற தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 11ஆம் தேதியில் இருந்து, செப்டமர் 8ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பங்களில் மாற்றம் செய்ய செப்டம்பர் 9 முதல் 11 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ