)
Tamil Nadu Weather Report Today (8-9-2025): வங்கக்கடலில் தொடர்ந்து நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் மேலும் இரு தினங்களுக்கு வெப்பச்சலன கனமழை பொழிவின் தாக்கம் விரிவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்றைய தினம் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் தீவிர மழைப்பொழிவிற்கான வாய்ப்புகள் மற்றும் நாளை மறுதினம் வரை எங்கெல்லாம் மழைப்பொழிவு இருக்கும் என்பதைக் குறித்து பார்ப்போம்.
வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பிரதேச பகுதிகள் சார்ந்த வங்கக்கடல் பகுதியின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தற்போதைய நிலையில் நீடித்து வருகிறது. இது நேற்றைய நிலையில் இருந்து சற்று கிழக்கு மற்றும் வடகிழக்கில் நகர்ந்திருக்கிறது. இதனால் தமிழகத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் கடலூர மாவட்டங்களில் மீண்டும் வெப்பச்சலன இடியுடன் கூடிய மழை பொழிவிற்கு சாதகமான வானிலை சூழலை உருவாக்கி இருக்கிறது. இதன் தீவிர தாக்கங்கள் காரணமாக தமிழகத்தில் மேலும் 48 மணி நேரங்களுக்கு மழை நீடிக்க கூடும்
இடிமின்னல் மழை பொழிவு : வானிலை ஆய்வறிக்கை ஆகஸ்ட் 9, 2025 (சனிக்கிழமை) எதிர்பார்த்தது போல திண்டுக்கல் மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், தர்மபுரி மாவட்டம், சேலம் மாவட்டத்தில் தீவிரமடைந்து கடலோர மாவட்டங்களை நோக்கி வழுவான இடிமின்னல் மழை பொழிவு செல்கிறது. ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் திருவாரூர், கூத்தாநல்லூர் மற்றும் குடவாசல் போன்ற பகுதிகளில் கன மழை பெய்த நிலையில், தற்போது மதுரை மாவட்டம் வடக்கு பகுதி, கொடைக்கனல் மலைப்பகுதி, திண்டுக்கல் மாவட்ட பகுதியில் மழை உருவாகி அந்த மழைப்பொழிவு, நத்தம், மேலூர், வாடிப்பட்டி, திண்டுக்கல், அரவக்குறிச்சி, வேடசந்தூர், மணப்பாறை போன்ற பகுதிகளில் தொடர்ந்து பொழிந்து கொண்டிருக்கிறது.
தெற்கு உள் மாவட்டங்களில் மழைபொழிவு : தெற்கு உள் மாவட்டங்களுக்கும் இன்று மழைப்பழிவு வலுவடையும். நேற்று கூட மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கூட ஓரிரு இடங்களில் நல்ல மழைப்பழிவு ஏற்பட்டது. அதேபோல இன்றைய நிலையிலும் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களை சார்ந்து ஆங்காங்கே மழைப்பொழிவு இருக்கும்.
தூத்துக்குடி, நெல்லை, குமரி மழை : தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் உள்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைபொழிவு ஏற்படலாம். நெல்லை, குமரி மாவட்டங்களில் கூட காற்றினுடைய வேகம் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலையில் ஓரிரு இடங்களில் மிதமான லேசான மழைப்பொழிவிற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.
மத்திய மாவட்டங்களில் மழைப்பொழிவு : ராமநாதபுரம் மாவட்டத்தினுடைய மத்திய மேற்கு பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளுக்கும் இன்று மழைக்கான வாய்ப்புகள் அங்காங்கே இருக்கக்கூடும். இதனை கடந்து மத்திய மாவட்டங்களில் இன்று மழைப்பொழிவிற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
திருப்பூர், கரூர் மழை நிலவரம் : திருப்பூர் மாவட்டத்தினுடைய கிழக்கு பகுதியிலயும் ஓரிரு இடங்களில் லேசான மழைப்பொழிவு ஏற்படலாம். கரூர் மாவட்டத்திலும் மத்திய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைப்பொழிவிற்கான வாய்ப்புகள் இன்றைய நிலையில் இருக்கக்கூடும்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மழை நிலவரம் : திருச்சிராப்பள்ளி பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழைக்கான வாய்ப்புகள் ஓரிரு இடங்களிலும், மத்திய கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும், வடக்கு பகுதிகளிலும் கூட இன்று ஓரிரு இடங்களில் மழைப்பொழிவிற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
நாமக்கல், சேலம் மழை நிலவரம் : நாமக்கல் மாவட்டத்தை ஒட்டிய பகுதிகளிலும், திருச்சி மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளிலும் இன்றைய நிலையில் ஓரிரு இடங்களில் மழைப்பொழிவிற்கு வாய்ப்புகள் இருக்கின்றன அதேபோல சேலம் மாவட்டத்தினுடைய மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில், தருமபுரி மாவட்டத்தினுடைய வடக்கு மற்றும் கிருஷ்ணகிரியில் சில இடங்களில் மழைபோழிவிற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
டெல்டா மாவட்டம் மழை நிலவரம் : டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக, இன்று மாலை மற்றும் இரவு முதல் நாளை அதிகாலை வரை தீவிர மழை பெய்யலாம்.
காரைக்கால் பாண்டிச்சேரி மழை நிலவரம் : அதேபோல காரைக்கால் பாண்டிச்சேரி பகுதிகளிலும் இத்தகைய மழை வாய்ப்புகள் இன்றைய தினம் இருக்கக்கூடும். வெப்பச்சலனத்தால் இடியுடன் கூடிய வலுவான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ