)
TR Baalu Wife Renuka Devi Passed Away: முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி (79) இன்று (ஆகஸ்ட் 19) காலையில் காலமானார். இவர் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயாரும் ஆவார்.
#JUSTIN | திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி காலமானார்#DMK #RIP #RenukaDevi #TRBaalu #news #ZeeTamilNews pic.twitter.com/3fJUWJsRfU
— Zee Tamil News (@ZeeTamilNews) August 19, 2025
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேணுகா தேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை தி. நகர் ராமன் தெருவில் (கதவு எண் 29) உள்ள டி.ஆர். பாலுவின் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இன்று மாலை அவரது வீட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும் மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவியின் மறைவையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், "முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் துணைவியாரும், மாண்புமிகு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி பாலு மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
“முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. டி.ஆர்.பாலு அவர்களின் துணைவியாரும், மாண்புமிகு அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான திருமதி ரேணுகா தேவி பாலு அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 19, 2025
திருமதி ரேணுகா தேவி பாலு அவர்களை இழந்து… pic.twitter.com/9s2gZxg40t
கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் ரேணுகா தேவி பாலு அவர்கள். அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு.
ரேணுகா தேவி பாலு அவர்களை இழந்து தவிக்கும் நண்பர் டி.ஆர்.பாலு, தம்பி டி.ஆர்.பி.ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ