)
TRB 2025 vacancy : தமிழ்நாட்டில் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதால் டிஆர்பி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 1,996 காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அன்றைய தினமே தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி முடிவடைந்தது. ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தும் செய்துகொள்ள விரும்பியோருக்கு ஆகஸ்ட் 13 முதல் 16 வரை 4 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
அரசுப் பள்ளிகள் தரம் உயர்வு
அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்து வரும் நிலையில், 1996 பணியிடங்கள் மட்டுமே தேர்வில் அறிவிக்கப்பட்டிருப்பதால் தேர்வுக்கு தயாராகி வருவோர் சற்று ஏமாற்றத்தில் இருக்கின்றனர். பிற்சேர்க்கை மூலம் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்படுமா என அனைத்து தேர்வர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் தமிழகம் முழுவதும் 20 அரசு உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்திபள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டது.
அதிகரிக்கும் காலிப் பணியிடங்கள்
அந்த அரசாணையின்படி, ஒவ்வொரு பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல்,உயிரியல், கணிதம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணினி அறிவியல் என 10 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் மொத்தம் 200 பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான சம்பள செலவினங்களை நடப்பு நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டிலே மேற்கொள்ளவும் ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே, அந்த 200 பணியிடங்களும் நடப்பு கல்வி ஆண்டிலேயே நிரப்பப்படும்.
தேர்வுக்குப் பிறகு வெளியாகும் அறிவிப்பு?
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியை பொருத்தவரையில், 50 சதவீத பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் டிஆர்பி மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. எனவே, புதிதாக தரம் உயர்த்தப்பட்டுள்ள 20 அரசு பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 200 காலிப்பணியிடங்களில் 50 சதவீதம் அதாவது 100 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்படும். எஞ்சிய காலிப்பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்பதால், மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2006 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
முதலாவது பட்டதாரி ஆசிரியர் பணிக்கு கடும் போட்டி
இப்போதைய நிலவரப்படி 1996 காலிப் பணியிடங்களுக்கு முதலாவது பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 390 பேர் போட்டியிடுகின்றனர். இதனால், கடுமையான போட்டி நிலவுகிறது. விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், தேர்வு கடினமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தேர்வு அட்டவணை:
தேர்வுகள் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
அக்டோபர் 10-ஆம் தேதி - முதுகலை பட்டதாரி ஆசிரியர்
அக்டோபர் 12-ஆம் தேதி - கணினி பயிற்றுநர்
அக்டோபர் 13-ஆம் தேதி - உடற்கல்வி இயக்குநர் (grade-1)
அக்டோபர் 12-ஆம் தேதி தேர்வு நுழைவுத் தேர்வு:
அக்டோபர் 12-ஆம் தேதி - கணினி பயிற்றுநர் (grade-1) மற்றும் உடற்கல்வி இயக்குநர் (grade-1) ஆகிய பணிகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும்.
அக்டோபர் 12-ஆம் தேதி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT) பணிக்கான நுழைவுத் தேர்வும் நடைபெறும்.
தேர்வுக்கான மையங்கள்:
தேர்வுக்கான மையங்கள், விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுத்த நகரங்களிலேயே அமைக்கப்பட்டிருக்கும். நுழைவுச் சீட்டு (Hall Ticket) வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல், தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ