)
Trichy East By Election: தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், அதனை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில், அத்தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது நடைபெற வாய்ப்புள்ளது? அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் இரண்டு தொகுதிகளில் நின்று விஜய் வெற்றி பெற்றார். இருப்பினும் அவர்களால் ஆட்சி அமைக்க முடியாமல் தவித்து வந்தனர். அதாவது பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏ-க்கள் தேவையாக இருந்தது. தவெகவிடம் 118 MLAக்கள் இல்லாததால், அவர்களுக்கு தேவையான 11 இடங்களுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முதலில் காங்கிரஸ் கட்சி கூட்டணியாக இணைந்து தனது ஆதரவி தெரிவித்தது. இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தது. பின்னர் 2 எம்எல்ஏக்கள் தேவைப்பட்ட நிலையில், மே 09 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தது. இந்த நிலையில், பெரும்பான்மை எண் கிடைத்ததை அடுத்து நேற்று (மே 10) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றார். அதேசமயம் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில்தான், திருச்சி கிழக்கு தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் மற்றும் அங்கு போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்னும் 6 மாதங்கள் அல்லது ஓராண்டுக்குள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தொகுக்கான எம்எல்ஏ இல்லாததால், நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள். எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்பதை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
அதேசமயம் இம்முறை தவெக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடப்போவது யார்? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அங்கு நடிகை திர்ஷா போட்டியிடுவார் என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அதேசமயம் ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களை களமிட வைக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது திருச்சி லால்குடியில் போட்டியிட்டு தோல்வியடைந்த கு.பா. கிருஷ்ணனை திருச்சி கிழக்கில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், தவெகவிற்கு நிச்சயம் ஒரு எம்எல்ஏ கூடுதலாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதற்காக நல்ல பிரபலத்துடன் இருக்கும் ஒருவரைதான் அங்கு போட்டியிட வைப்பார்கள் என தெரிகிறது. மேலும், தவெக சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் போட்டியிடப்போவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உடனடியாக பதிலளிக்காமல் சிரித்துக்கொண்டே சில நொடிகள் அமைதியாக இருந்த சகாயம் ஐஏஎஸ், சிறிது நேரம் கழித்து, "நான் இந்த சமூகத்தில் இருந்து வந்தவன். என்னை வளர்த்த இந்த மக்களுக்காக தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறேன். எதிர்காலத்திலும் அந்த பயணம் தொடரும். ஆனால், த.வெ.க-வில் சேர்வது தொடர்பாக கட்சி நிர்வாகத்திடமே கேளுங்கள்," என்று கூறி தனது ↓ நிலைப்பாட்டை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அன்பில் மகேஷ் போன்றோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அவர், திருச்சியை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதை தாண்டி மா. சுப்பிரமணியன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகிய முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என தெரிகிறது. அவர்கள் வேறு வேறு மண்டலங்களை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.