)
TTV Dhinakaran Slams Edappadi Palananisamy: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் கீழே உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியாரின் திருவுருப்படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (செப். 17) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியபோது, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாளை போற்றி அவருக்கு மரியாதை செலுத்தி இருக்கிறோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இபிஎஸ் சந்தித்து விட்டு வெளியே வரும் போது முகத்தை முடி வந்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் பழனிச்சாமி எப்படியெல்லாம் வீர வசனம் பேசினார். நான் தன்மானமிக்கவன், ஆட்சி அதிகார முக்கியமல்ல, வெற்றி, தோல்வி பெருசு அல்ல. தன்மானம் தான் முக்கியம் என பயங்கரமாக சவுண்டு போட்டு பேசினார். பத்திரிகைகளிலும் ஊடகத்திலும் எழுச்சி பயணத்தில் மாற்றம் செய்து டெல்லிக்கு சென்று துணை ஜனாதிபதியை பார்த்துவிட்டு இரவு மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்திருக்கிறார்.
ஏற்கனவே அமித்ஷாவை சந்திக்க போகிறார் என தெரிந்த ஒன்று. இப்படி எல்லாம் பொய் சொல்லி யாரை ஏமாற்ற பார்க்கிறார் அவர். தமிழ்நாட்டு மக்களையும் அரசியல்வாதிகளையும் இனி மேலும் பழனிச்சாமி ஏமாற்ற முடியாது. கூட்டணியில் இருக்கிறீர்கள் வெளிப்படையாக கூட்டணியில் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டார்கள். டெல்லிக்கு சென்று, மத்திய உள்துறை அமைச்சரை பார்த்து விட்டு வெளியே வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?.
அரசியலில இதுபோல் நடந்து உள்ளதா? எந்த கட்சி தலைவராவது டெல்லிக்கு சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து விட்டு வரும்போது முகத்தை மூடிக்கொண்டு ஓடி வருவதை பார்த்து இருக்கிறீர்களா? யார் முகத்தை மூடிக்கொண்டு வருவார்கள் என உங்களுக்கு தெரியும்.
ஊடகங்கள் மூலமாகத்தான் நானும் பார்த்து தெரிந்துகொண்டேன். அவரும் அவரது மகன் இருவரும் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து விட்டு வந்து முகத்தை மூடிக் கொண்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு என்ன காரணம் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். மன்னர்கள் சாதனை செய்தால் இன்று முதல் சாதனை மன்னர் என அழைப்பார்கள். அது போல எடப்பாடி பழனிச்சாமியை 'முகமூடி பழனிச்சாமி' என அழைக்க வேண்டும். ராஜதந்திரம், துரோகம், திருட்டுத்தனத்தையும், அனைத்து 420 ஏமாற்று வேலை செய்து ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள்.
அவர்கள் எதை வாங்கி விட்டார்கள் என தெரியவில்லை. அவரை டான் என பேசியவர்கள். அரசியல் தலைவர் முகத்தை மூடிக்கொண்டு வர மாட்டார்கள், முகமூடி கொள்ளையர்கள் ஏமாற்றி வருவது போல் வந்து போலீஸ் பிடித்து உள்ளே போட்டு இருப்பார்கள். பழனிச்சாமியின் குணாதிசயம் இதுதான். தமிழ்நாட்டு மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்.
அங்கு உள்ளவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம், பொதுச்செயலாளர் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அதுதான் அம்மாவும் பின்பற்றினார்கள். அந்த அடிப்படை விதிகள் மாற்றியதால் அந்தக் கட்சி அதிமுக அல்ல, அண்ணன் எடப்பாடி திராவிட முன்னேற்றக் கழகம்தான் எடப்பாடி கட்சி, அதிமுக என்பது இல்லை.
எம்ஜிஆர், அம்மா மற்றும் வெற்றிச்சின்னம் இரட்டை இலையை வைத்துக்கொண்டு தொண்டர்களையும் மக்களையும் ஏமாற்றி வருகிறார். பழனிச்சாமி இந்த தேர்தலில் என்னதான் பணம் பலம் இருந்தாலும், எத்தனை கட்சிகள் கூட்டணி வைத்தாலும் உறுதியாக பழனிச்சாமி தோல்வியை சந்திக்க போவது உறுதி" என தெரிவித்தார்.
நீங்கள் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அவர், "உங்கள் யுகத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" என தெரிவித்தார். முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அதிமுக கோரிக்கை வைத்தது குறித்தான கேள்விக்கு, "தென் மாவட்டங்களில் எல்லா மக்களாலும் மதிக்கக்கூடிய தெய்வமாக வணங்கக்கூடிய நபர்தான் முத்துராமலிங்க தேவர். அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை அதை யார் எடுத்துக் கொண்டு முன் வைத்தாலும் தவறில்லை.
ஆனால் 10.5 % இடஒதுக்கீட்டை வழங்கி தென் மாவட்ட மக்களை எப்படி எல்லாம் அரசியல் ரீதியாக பார்த்து ஒரு கண்ணுக்கு வெண்ணையும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் என்பது போல் நடத்து கொண்டார் என எல்லோருக்கும் தெரியும். அதனால் அந்த பகுதி மக்கள் எப்படியெல்லாம் எதிராக இருக்கிறார்கள் என்பதை நினைத்து அவர்களை சரி செய்ய வேண்டும் என்பதற்காக முயற்சிகளை எடுத்து வருகிறார். யார் போய் தேவர் ஐயா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தாலும் அது நல்ல கோரிக்கை.
தன்மான தலைவர் எடப்பாடி எப்படி வெளியே வந்தார் என தெரியும். இந்த தேர்தலில் அமமுக போட்டியிடுகிற கூட்டணி இந்த தேர்தலில் அந்த கூட்டணி தான் வெற்றிபெறும். உறுதியாக ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்கும்.
பாஜகவுக்கு நன்றியோடு இருப்பேன் எனக்கு கூறினார். 2017ஆம் ஆண்டில் எடப்பாடி ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தபோது சட்டமன்றத்தில் அவரை காப்பாற்றியது 122 சட்டமன்ற உறுப்பினர்கள். ஆனால் அவருக்கு எதிர்த்து வாக்களித்த 11 ஓபிஎஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆதரவாக வாக்களித்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.
வாக்கெடுப்புக்கு பிறகு பாஜக காலையில் விழுந்து நான்காண்டு காலம் ஆட்சியில் இருந்தார். ஆட்சி அமைப்பதற்கு உதவியாக இருந்தவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். அவர்களை பதவி நீக்கம் செய்தார் பழனிச்சாமி.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா பெங்களூர் சென்ற பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் சட்டமன்றத்தில் வெற்றி பெறுவதற்கு காரணமானவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள். அதற்கு பிறகு பாஜக அவரது நான்கு ஆண்டுகால ஆட்சியை காப்பாற்ற பாஜக உதவியது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிக்கு முக்கியமான தேர்தல், அந்த தேர்தலில் பாஜகவிற்கு துரோகம் செய்து வெளியே வந்தார்.
பழனிச்சாமி எப்போதும் முகமூடி மனிதர்தான். இரட்டை வேடம், துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. நன்றி என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்பவர். வெற்றி தோல்வியை தாண்டி அமமுக உறுதியாக உள்ளது. எப்போதும் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்க முடியாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு, 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எல்லோருக்கும் துரோகம் செய்துவிட்டு ஆட்சியில் அமர்ந்தவரும், அதற்கு பிறகு ஆட்சி புரிய உதவியை ஓபிஎஸ் அவர்களுக்கும் நான்கரை ஆண்டு காலம் காப்பாற்றிய பாஜகவுக்கும் எல்லோருக்கும் துரோகம் செய்த பழனிச்சாமி, 2026 தேர்தலுக்குப் பிறகு உண்மையாகவே நடுரோட்டில் நிற்கப் போகிறார் என்பது நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்" என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ