)
TVK Leader Vijay Meets Karur Stampede Victims Families : கோலிவுட்டில் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய், 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்தார். கட்சி தொடங்கி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், விஜய் களத்திற்கு வந்தது என்பது குறைவு. விக்கிரவாண்டி மாநாடு, மதுரை மாநாடு, கோவை பூத் கமிட்டி மாநாடு, பொதுக் குழு கூட்டம், ஆளுநர் சந்திப்பு, பனையூர் மக்கள் சந்திப்பு போன்றவற்றை மட்டுமே அவர் நடத்தி இருக்கிறார்.
தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளில் கூட விஜய், பனையூர் அலுவலகத்திலேயே மரியாதை செலுத்தி வருகிறார். களத்திற்கு வராமல், வொர்க் ஃப்ரம் அரசியல் செய்து வருவதாக அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். வொர்க் ஃப்ரம் அரசியலை விட்டுவிட்டு, விஜய் களத்திற்கு வர வேண்டும் என பலரும் கூவிகூவி அழைத்தனர்.
இதனை அடுத்து, தவெக தலைவர் விஜய் 100 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்தார். 2025 செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் இருந்து விஜய் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். திருச்சியை தொடர்ந்து, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் அவர் பரப்புரை மேற்கொண்டனர். இந்த பரப்புரை கூட்டங்களில் தவெக தொண்டர்கள், ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.
இருப்பினும், தவெக தலைமையோ கூட்டத்தை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது. மேலும், விஜயை பார்ப்பதற்காக பல மணி நேரம் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல், கால் கடுக்க ரசிகர்கள், தொண்டர்கள் பரப்புரை கூட்டத்தில் காத்திருந்தனர். இப்படியாக தவெக பரப்புரையை மேற்கொண்ட நிலையில், கரூர் பரப்பரை கூட்டத்தில் அசம்பாவிதம் நடந்தது. கரூரில் நடந்த தவெக பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ஆனால் கரூர் விஷயத்தில் தவெக தலைமையோ அல்லது இரண்டாம் கட்ட தலைவர்களோ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்திலும் இல்லை. வழக்குக்கு பயந்து சில தலைவர்கள் தலைமறைவாகிவிட்டனர். விஜய் கூட, சம்பவத்தன்று கரூரில் இருந்து அவசரமாக புறப்பட்டு, சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பிறகு வீடியோ வெளியிட்டார். அப்போதும் கூட 41 உயிர்களுக்கு பொறுப்பேற்காமல், திமுகவை அவர் குற்றச்சாட்டி இருந்தார்.
இதற்கிடையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்தனர். ஆனால், விஜய் அவர்களை இதுவரை சந்திக்கவில்லை. இது பெரும் விமர்சனங்களை எழுப்பியது. இதனை அடுத்து, தவெக தலைவர் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. ஆனால் அதனையும் தவெக கேன்சல் செய்துவிட்டு, தற்போது சென்னையிலேயே அவர்களை வரவழைத்து சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
இதன் மூலம் விஜய் வொர்க் ஃப்ரம் அரசியலில் இருந்து திரும்பாதது தெரிகிறது. சரியாக ஒருமாதம் கழித்து 2025 அக்டோபர் 27ஆம் தேதி விஜய் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை விஜய் சந்திக்க உள்ளார். சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கரூரில் சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில், அதில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக மாமல்லபுரத்தில் அவர்களை விஜய் சந்திப்பதாக தவெக வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், விஜய் எடுத்த முடிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களை கரூரில் கூட விஜய்க்கு சந்திக்க நேரம் இல்லையா என மக்கள் எழுப்பி இருக்கின்றனர். அதோடு, 41 உயிர்களுக்கு பொறுப்பேற்காத விஜய், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பதாவும் கூறி வருகின்றனர். மீண்டும் மீண்டும் வொர்க் ஃப்ரம் அரசியலேயே விஜய் கையில் எடுத்து இருப்பதாக அவரது ரசிகர்களே புலம்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ