அவசர அவசரமாக டெல்லி சென்ற விஜய்! என்ன காரணம்? முழு விவரம் இதோ!

இரண்டாவது முறையாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவக்கத்தில் நாளை ஆஜராக உள்ளார் விஜய். இதற்காக இன்று தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார்.   

Written by - RK Spark | Last Updated : Jan 18, 2026, 08:16 PM IST
  • டெல்லிக்கு பறக்கும் விஜய்!
  • தனி விமானத்தில் பயணம்..
  • உச்சக்கட்ட பரபரப்பு!
அவசர அவசரமாக டெல்லி சென்ற விஜய்! என்ன காரணம்? முழு விவரம் இதோ!

கடந்த வருடம் செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவக்கத்தில் கடந்த 12ம் தேதி  தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடைபெற்றது. நாளை மீண்டும் இரண்டாவது முறையாக தவெக தலைவர் விஜய் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் தற்பொழுது சென்னை ஈசிஆர் நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட தவெக தலைவர் விஜய் சென்னை விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க: பொங்கல் பரிசு ரூ.3,000 பெறாதவர்களுக்கு கடைசி வாய்ப்பு! தவறினால் பணம் கிடைக்காது.. தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகம்!

தமிழக அரசியலில் தற்போது உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்காக தற்போது டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். நாளை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். அவருடன் கட்சியின் வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் சென்றுள்ளனர். கடந்த விசாரணையில் காலையில் கிளம்பி டெல்லி சென்ற விஜய், இந்த விசாரணையில் முதல் நாளே கிளம்பி உள்ளார். கரூரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தில் பரபரப்பு

விஜய் சிபிஐ விசாரணைக்காக டெல்லி செல்கிறார் என்ற தகவல் வெளியானதுமே, தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் சென்னை விமான நிலையம் முன்பு குவிய தொடங்கினர். "தளபதிக்கு துணை நிற்போம்", "அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை எதிர்க்கிறோம்" என்ற கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் அங்கு திரண்டுள்ளனர். இதனால் விமான நிலைய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

அரசியல் ரீதியான நெருக்கடியா?

2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். தவெக மாநாடு மற்றும் கூட்டங்களுக்கு கூடும் கூட்டம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை மிரண்டு போக வைத்துள்ளது. இந்த சூழலில், சிபிஐ விசாரணை என்பது விஜய்க்குத் தரப்படும் அரசியல் ரீதியான நெருக்கடி என்று தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். "எங்கள் தலைவர் நேர்மையானவர். சட்டத்தை மதித்து நடப்பவர். எத்தகைய விசாரணையையும் அவர் துணிச்சலாக எதிர்கொள்வார். இது எங்களை முடக்குவதற்கான முயற்சி என்றால், அது பலிக்காது" என்று கட்சியின் முக்கிய தெரிவித்துள்ளார்.

நாளை என்ன நடக்கும்?

நாளை டெல்லியில் நடைபெறவுள்ள விசாரணையில் விஜய் என்ன வாக்குமூலம் அளிப்பார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. காலை 10 மணியளவில் அவர் விசாரணை அதிகாரிகளின் முன்பு ஆஜராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை போல இந்த விசாரணை ஒரு நாள் மட்டும் நடைபெறுமா அல்லது தொடருமா என்பது நாளையே தெரிய வரும். அதேசமயம், டெல்லியில் உள்ள தவெக ஆதரவாளர்களும் விசாரணை அலுவலகம் முன்பு திரள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்த்துக் களமிறங்கியுள்ள விஜய்க்கு, இந்த சிபிஐ விசாரணை ஒரு சவாலான காலகட்டமாகும்.  ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இப்போது டெல்லியை நோக்கித் திரும்பியுள்ளது.

மேலும் படிக்க: ஓசூர் ஏர்போர்டுக்கு சிக்கல்... மத்திய அரசு அனுமதி மறுத்தது ஏன்? - தமிழக அரசு என்ன செய்யும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News