)
TVK Madurai Maanaadu Changes : 2026ஆம் ஆண்டில், சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கிறார் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய். தான் சந்திக்க போகும் முதல் தேர்தலிலேயே முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் இவர், அதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், வி.சாலையில் தவெக-வின் முதல் மாநாடு நடந்தது. இப்போது, அக்கட்சியின் 2வது மாநில மாநாடு மதுரையில் நடக்க இருக்கிறது.
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2வது மாநில மாநாடானது, மதுரையில் உள்ள தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருகும் பாரபத்தியில் நடக்கிறது. சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் தற்கான இடம் தேர்வு செய்யப்பட்டதோடு, மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முடிவடைந்து விட்டன. ஆகஸ்ட் 21ஆம் தேதியான இன்று, மதியம் 3.30 மணியளவில் மாநாடு தொடங்குகிறது. மாநாட்டு திடலில், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்று குறிப்பிட்டு, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அண்ணா மற்றும் கட்சித்தலைவர் விஜய் ஆகியோரது படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கானோர் வந்திருக்கின்றனர்.
தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கென ஏற்கனவே கொடி பாடல் மற்றும், தமிழக வெற்றிக் கழகம்: கொள்கைப் பாடல் ஆகியவை இருக்கின்றன. இந்த நிலையில், தற்போது 2வது மாநில மாநாட்டில் இன்னொரு பாடல் வெளியாக இருக்கிறதாம். அந்த பாடலுக்கு, “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்கிற தீமை வைத்து ஒரு பாடல் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் வெளியான தவெக கொடி பாடலுக்கு தமன் இசையமைத்திருந்தார். இப்போது வெளியாக இருக்கும் பாடலுக்கும் அவரே இசையமைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்கூட்டியே வரும் விஜய்?
விஜய், மாநாடு ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே வர இருப்பதாக கூறப்படுகிறது. அவரது தந்தையும் தாயும் நேற்று மாலை மதுரைக்கு விமானத்தில் வந்த நிலையில், விஜய் காரில் வந்ததாக கூறப்படுகிறது. இவர், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே மாநாட்டு திடலுக்கு வர இருக்கிறாராம். அதே போல, இந்த மாநில மாநாட்டில் புதுப்புது தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கிறது.
கொடிக்கம்பம்..
மாநாட்டுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, அதற்காக ஏற்பாடு செய்த 100 அடி கம்பம் சரிந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள காரின் மீது விழுந்தது. இதையடுத்து இது போன்று விபத்துகளை தவிர்க்க, அந்த கொடிக்கம்பம் சிறிதக்கப்பட்டு இருக்கிறது. கடந்த முறை விஜய் கட்சிக்கூட்டம் நடத்திய போது தடுப்புக்கு போடப்பட்டிருந்த கம்பிகளை தாண்டி தொண்டர்கள் ஏறி வர ஆரம்பித்தனர். இதில் பலருக்கு அடிப்பட்டது. இதை தடுக்க, அந்த கம்பிகளில் க்ரீஸ் பூசப்பட்டு இருக்கிறது. அதே போல, இந்த முறை தண்ணீர் குடிப்பதற்காக நேரடியாக நிலத்தில் பைப் போட்டு கொடுக்கப்பட்டுள்ளது.மருத்துவ வசதிக்கு ஆம்புலன்ஸ், பாதுகாப்புக்கு காவல்துறை என்று பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ