TVK Mathiyazhagan In Police Custody : கரூர் தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் விசாரணை நடத்த ஐந்து நாட்கள் கேட்டு சிறப்பு புலனாய்வு குழு மனு தாக்கல் செய்தார் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக்கழக வழக்குரைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் நீதிபதி இரண்டு நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பரப்பரைக் கூட்டத்தில் விஜய் பேசும்போது ஏற்பட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு புலனாய் குழு மாற்றப்பட்டதால் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஐந்து நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில், மதியழகனிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐந்து நாட்களுக்கு போலீஸ் கஸ்டடி கேட்டு மனு தாக்கல் செய்தனர். நீதிபதி இரண்டு நாட்கள் கஸ்டடியில் அளித்து உத்தரவு விடுவதாக தெரிவித்தார் விசாரிக்கலாம் எனக் கூறினார்.
இதற்கு தமிழக வெற்றிக் கழக வழக்குரைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக மதியழகனை குற்றவியல் நீதிமன்றம் எண் 1 ல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் இரண்டு நாட்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் கஸ்டடியில் எடுத்த விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார் குற்றவியல் நீதிபதி பரத் குமார்.
மேலும் படிக்க | விஜய் உயிருக்கு ஆபத்து.. நயினார் நாகேந்திரன் அடுக்கும் காரணங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









