)
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை என்ற பகுதியில் வசித்து வருபவர் கௌதமன் வயது 34. இவர் கார் வாடகை விடும் தொழில் செய்து வருகிறார். இந்த சூழலில், இவருக்கு ஹரிகரன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், ஹரிஹரன் கௌதமனிடம் ஒரு வாரத்திற்கு முன்னர் கடந்த 20 ஆம் தேதி அன்று 15 லட்ச ரூபாய் மதிப்புடைய காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
காரை எடுத்துச் சென்ற ஹரிகரன் காரை மீண்டும் தராமல் இருந்துள்ளார். உரிமையாளர் கெளதம் செல்போன் அழைப்பையும் ஏற்காமல் புறக்கணித்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கௌதமன் காரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் மூலம் கார் எங்கே இருக்கிறது என பார்த்தபோது வேலூரில் ரயில்வே ஊழியர் வீட்டில் கார் நின்றுள்ளது என்பதை தெரிந்து கொண்டுள்ளார்.
தொடர்ந்து வேலூருக்கு சென்று காரை வைத்திருந்த ரயில்வே ஊழியரான சுதீப் பிரகாஷிடம் கேட்டுள்ளார். அப்போது இந்த காரை ஹரிகரன் வேறொரு நபர் மூலமாக சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்து விட்டார் எனக் கூறி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த கௌதமன் ஹரிஹரனை வேறு ஒரு தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டபோது செல்போன் அழைப்பை ஏற்ற ஹரிகரன் மற்றும் அவரது நண்பர்களான பைசல், கீர்த்திவாசன் ஆகியோர் காரை மறந்துவிடு இல்லையென்றால் உன் உயிரை விட வேண்டி இருக்கும் எனக் கூறி மிரட்டி உள்ளனர்.
இதனை அடுத்து கௌதமன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், திருவொற்றியூர் போலீசார் ஹரிஹரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் உரிமையாளரிடம் இருந்து வாடகைக்கு வேண்டும் என கூறி திருப்பி விடாமல், காரை விற்பணை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது. சென்னை மதுரவாயில் பகுதி சேர்ந்த ஹரிகரன் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ