)
TVK Minister Keerthana: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. 108 இடங்களை வெற்றி பெற்று விஜயின் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 118 மேஜிக் நம்பரை திரட்ட தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளில் எடுத்தது. இறுதியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைத்துள்ளார். நேற்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த பதவியேற்பு விழாவில் விஜய்க்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
விஜய் முதல்வராக பதிவேற்றத்தை அடுத்து, செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், கீர்த்தனா, அருண்குமார், பிரபு உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதற்கிடையில் 17வது தமிழக சட்டப்பேரவியின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9 மணிக்கு கூடியது. விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 60 ஆண்டு கால திராவிட கட்சித் தலைவர்கள் சட்டப்பேரவைக்கு சென்று வந்த நிலையில் தற்போது புதிய அரசியல் தலைமை சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளது.
இன்றைய கூட்டத்தில் 2026 தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று முறைப்படி பதவி ஏற்று கொண்டு வருகின்றனர். தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள கருப்பையா புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார். அந்த வகையில், முதல்வர் ஜோசப் விஜய் தனது உறுதி மொழியை ஏற்று பதவியேற்றார். முதல்வர் ஜோசப் விஜய் தொடர்ந்து, மற்ற எம்எல்ஏக்கள் பதிவேற்று கொண்டு வருகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரும், தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வெற்றிச் சான்றிதழுடன் வந்து, தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிராமணம் அல்லது உறுதி மொழி எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அமைச்சர் கீர்த்தனா பதவியேற்காமல் சென்றுள்ளார். சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை கீர்த்தனா எடுத்து வரவில்லை. இதனால், அவர் சட்டப்பேரவையில் கீர்த்தனா பதவியேற்கவில்லை. நேற்றைய தினம் சட்டப்பேரவை அலுவலர் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் உத்தரவிட்டு இருந்தார்.
அதாவது, அனைத்து எம்எல்ஏக்களும் வெற்றி பெற்ற சான்றிதழை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சிவகங்கை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட கீர்த்தான அந்த சான்றிதழை எடுத்து வரவில்லை. இதனால், அவரால் இன்று எம்எல்ஏவாக பதவியேற்க முடியவில்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் நாளிலேயே அமைச்சராக பொறுப்பேற்ற கீர்த்தனா, தனது சான்றிதழையே மறந்து வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். கீர்த்தனா மட்டுமில்லாமல், அதிமுகவின் சி.வி.சண்முகம், கே.சி.கருப்பண்ணன் ஆகியோரும் எம்எல்ஏவாக பதவியேற்கவில்லை. இவர்களும் தங்களது வெற்றி சான்றிதழை மறந்துவிட்டதால், கீர்த்தான, சி.வி.சண்முகம், கருப்பண்ணன் ஆகியோர் எம்எல்ஏவாக பதவியேற்கவில்லை.
இதனை தொடர்ந்து, நாளைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க மே 13ஆம் தேதி வரை கால அவகாசத்தை ஆளுநர் வழங்கியுள்ளார். இதனை அடுத்து, நாளை (மே 12) நடைபெற உள்ளது. இந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். மேலும், நாளைய தினம் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
| தவெக கீர்த்தனா | சிவகாசி தொகுதி | 68,709 வாக்குகள் |
| அதிமுக சி. சண்முகம் | மயிலம் தொகுதி | 82,353 வாக்குகள் |
| அதிமுக கே.சி.கருப்பண்ணன் | பவானி தொகுதி | 75,577 வாக்குகள் |
நேற்றைய தினமும் முதல்வராக பதவியேற்றதும் விஜய் மூன்று திட்டங்களுக்கு கையெழுத்து போட்டுள்ளார். அதன்படி, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
(2) பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும், போதுமான ஆளிநர்கள்/ பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய "சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை" மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், 37 காவல் நிலையங்களும், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்களும் என மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) அமைக்கப்படும். இந்த மூன்று திட்டங்களில் தான் விஜய் முதல்வரானதும் கையெழுத்திட்டுள்ளார்.
1. கேள்வி - அமைச்சர் கீர்த்தனா ஏன் பதவியேற்கவில்லை
பதில் - சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்ற கீர்த்தனா, தனது வெற்றி சான்றிதழை சட்டப்பேரவைக்கு எடுத்து வராததால், அவரால் இன்று எம்எல்ஏவாக பதவியேற்க முடியவில்லை.
2. கேள்வி - கீர்த்தனா மட்டும் தானா பதவியேற்கவில்லை?
பதில் - அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் மற்றும் கே.சி. கருப்பண்ணனும் எம்எல்ஏவாக சட்டப்பேரவையில் பதவியேற்கவில்லை.
3. கேள்வி - முதல்வர் விஜய் கையெழுத்திட்டுள்ள முதல் திட்டம் என்ன?
பதில் - 200 யூனிட் இலவச மின்சாரம், சிறப்பு அதிரடிப்படை, போதைப் பொருள் தடுப்பு படை ஆகிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார்.