Tamil Nadu Latest News Updates: 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தற்போதே தமிழ்நாட்டில் அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. கடந்த 2021 தேர்தலை போல் இன்றி நிச்சயம் மும்முனை போட்டி தற்போது தென்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
Tamil Nadu News: 2026 தேர்தல் - திமுக கூட்டணி
திமுக அதன் கூட்டணியை அப்படியே தக்கவைத்துக்கொள்ள திட்டமிடும். காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் மற்றும் இதர கட்சிகளுடன் இணைந்து இம்முறையும் திமுக தேர்தலை சந்திக்கும் எனலாம். இதில் இந்த முறை 200 தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் கூறப்படுகிறது. முக்கிய கட்சிகள் தவிர திமுக மற்றும் இதர கட்சியினர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.
Tamil Nadu News: 2026 தேர்தல் - அதிமுக கூட்டணி
மறுமுனையில் எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியை பொறுத்தவரை, பாஜக தற்போது இணைந்துள்ளது. பாமக அதிமுக கூட்டணியில் நீடிக்கிறதா என்பதும் இன்னும் உறுதியாகவில்லை. தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இதில் அதிமுகவின் பாஜக 50 தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. மேலும் இதர கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tamil Nadu News: தவெக பிளான் என்ன?
இந்த இரண்டு அணிகள் மட்டுமின்றி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கிய கவனத்தை பெறுகிறது. தவெக யார் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்பதே புரியாத புதிராகவே இருக்கிறது. திமுக, அதிமுக அணிகளை தவிர்த்து தனி கூட்டணியாக இருக்கும் என பொதுவாக கூறப்படுகிறது. மேலும், நாம் தமிழர் கட்சியும் 234 தொகுதிகளில் தனித்து நிற்க திட்டமிட்டு வருவது தனிக்கதை.
Tamil Nadu News: தமிழிசை சௌந்தரராஜன் கருத்து...
அந்த வகையில், தவெகவின் துணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், தங்களின் கட்சியின் பாஜக உடன் கூட்டணி வைக்காது என பேசியிருந்தார். அதற்கு பாஜகவின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்த கருத்து பெரும் பரபரப்பை உண்டாக்கியிருந்தது.
பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை என்றும் யாரோ ஒருவர் சொல்வதை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக பார்க்க முடியாது என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்திருந்தார். பாஜக கூட்டணி குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அவர் சொல்லட்டும் அதன் பின்பு பேசுகிறோம் என்றும் தமிழிசை பேசியிருந்தார்.
மேலும் தமிழிசை பேசுகையில், "கூட்டணி தொடர்பாக பேச எங்க கட்சியின் தலைவர்கள் இருப்பார்கள். எல்லோருமே ஒன்று சேர வேண்டிய சூழல் நமக்கு வந்திருக்கிறது என்பது எனது கருத்து. கூட்டணி யாரிடம் பேசுவது, எப்படிப் பேசுவது என்பது குறித்து அகில பாரத தலைமை முடிவு செய்வார்கள். திமுக அப்புறப்படுத்த வேண்டிய ஆட்சி, யாரெல்லாம் உங்க கொள்கை உள்ளவர்களோ அவர்களெல்லாம் உடன் இருந்தால் நல்லது என்பது எனது கருத்து" என பேசியிருந்தார்.
Tamil Nadu News: தவெக பதிலடி
இந்நிலையில், மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று மாலை தவெக சார்பில் அனுசரிக்கப்பட்டது. போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவுக்கூரும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின்னர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழிசை சௌந்தரராஜன் கருத்து குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் மற்ற கட்சிகளை போல் இல்லாமல் தங்கள் கட்சியில் நிர்வாகிகள் அனைவரும் தலைவரின் அறிவுறுத்தலின் பேரிலேயே பேசுகிறோம் என்றும் முன்னர் சொன்னதுபோல் கொள்கை எதிரி பாஜக உடனும், மாநிலத்தில் அரசியல் எதிரி திமுகவுடனும் கூட்டணி இல்லை என்பது உறுதி என்றும் பேசினார். மேலும், இதனை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | ஜெர்மன் படிக்க ஆசையா? தமிழக அரசின் இலவச பயிற்சி... முடித்தால் ரூ.2 லட்சம் சம்பளம்!
மேலும் படிக்க | அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ