தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் செங்கோட்டையன். இவரே தவெகவில் அதிக அரசியல் அனுபவம் கொண்டவராக திகழ்கிறார். கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்கொடி தூக்கிய நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சூழலில்தான், செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
8 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த செங்கோட்டையன்
8 முறை சட்டமன்ற உருப்பினராக இருக்கும் செங்கோட்டையனையும் விஜய் எவ்வித தயக்கமும் இன்றி கட்சியில் சேர்த்துக்கொண்டார். இந்த சூழலில், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கோட்டையன் அவரின் சொந்த தொகுதியான கோபிசெட்டிப்பாளையத்திலேயே போட்டியிடுகிறார். அவர் வழக்கம்போல் வெல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையன் குறித்து எம். ஆர். விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவல்
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் செங்கோட்டையன் குறித்து அதிர்ச்சிகரமான தகவலை கூறி இருக்கிறார். இது அனைவரது மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.
செங்கோட்டையனுக்கு மரியாதை இல்லை
எம். ஆர். விஜயபாஸ்கர் கூறியதாவது, செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வெளியேறும் மனநிலையில் உள்ளார். அவர் தவெகவில் சேரும் முடிவை அவசரப்பட்டு எடுத்ததாகவும் வேறு யாரும் அந்த தவறை செய்துவிட வேண்டாம் என்று அவர் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் சிலரிடம் கூறி உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையனுக்கான மரியாதை இல்லை என தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தவுடன் அவர் விஜய்யுடனே இருப்பார் என்றும் அவரின் தலையீடு கட்சியில் அதிகம் இருக்கும் என்றும் அவரின் 50 ஆண்டு கால அரசியல் அனுபவத்தை தவெகவினர் பெற்றுக்கொள்வார்கள் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையனுக்கு மரியாதை இல்லை என்றும் அவர் விரைவில் அக்கட்சியில் இருந்து விலகுவார் என்றும் கூறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல்
2026 சட்டமன்ற தேர்தலில் செங்கோட்டையன் கோபிசெட்டிப்பாளையத்தில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் அவர் 6 முறை போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். 1980, 1984, 1989, 2011, 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு அபார வெற்றியை பெற்றுள்ளார். இதன் காரணமாக இம்முறையும் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அவர், இம்முறை தவெகவில் இணைந்ததால் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதன் காரணமாக அவரது வாக்கு அடிவாங்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் அவர் வெற்றி பெறும் வாய்ப்பும் உள்ளது.
செங்கோட்டையனுக்கு எதிராக திமுக சார்பில் நல்லசிவம், அதிமுக சார்பில் வி பி பிரபு, நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: விஜய்யால் கடுப்பான கருணாநிதி! “அவன் லீட்ர்ன்னா..நான் யாரு?” சுறா பட சம்பவம்..
மேலும் படிக்க: தஞ்சாவூரில் வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!









