தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான பிரசாரம் நடத்தி வருகிறார். அவர் கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து, தற்போது அது புயல் போல வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தவெக உடன் கூட்டணியை மறைமுகமாக பேசி உள்ளார். இது தற்போது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: பாலியல் வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் விடுதலை ஆனது எப்படி? அன்புமணி சொல்லும் பாயிண்ட்!
கரூர் விபத்து குறித்து விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி, கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்த கூட்டநெரிசல் சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்து, அதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இப்படி ஏற்பட்டு இருப்பதாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அரசு தரப்பில் ஆணையம் ஏற்படுத்தப்பட்டாலும் அது சரியாக செய்யப்படவில்லை என்றும், கிட்னி முறைகேடு சம்பவம் போன்ற விசயங்களில் போல இல்லாமல் சரியான விசாரணை நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து CBI விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தவெக-அதிமுக கூட்டணி மறைமுக உறுதிப்படுத்தல்
மேலும் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு கூட்டணியை மட்டும் நம்புபவர்கள். ஆனால் அது தவறு, கூட்டணி முக்கியத்துவம் தான். இருந்தாலும் அதனாலேயே வெற்றி உறுதி செய்ய முடியாது என தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதிமுக அமைக்கப்பெறும் கூட்டணி வலுவாக இருக்கும் என்று வலியுறுத்தி, அது தவெக உடன் கூட்டணியாக இருக்கலாம் என்று மறைமுகமாக குறிப்பிட்டார். “இங்கு பாருங்க, தமிழகம் வெற்றிக் கொடி பறக்குது, பிள்ளையார் சுழி போட்டாங்க, குமாரபாளையத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி, ஸ்டாலினின் செவியை கிழித்துக் கொண்டு செல்லப்போகிறது” என கூறி அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தி உள்ளார்.
BREAKING - தவெக உடன் கூட்டணியை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.. #ThalapathyVijay #TVKVijay #EdappadiPalaniswami pic.twitter.com/cxSjhvgRvL
— The_Introverter (@JOHN_WICK0702) October 8, 2025
தேர்தல் முன்னோக்கில் அரசியல் சூழல்
இந்நிலையில், பழனிசாமியின் மறைமுக கூற்று தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. தவெக-அதிமுக கூட்டணி ஏற்பட்டால் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முக்கியமானதாக மாறும் என்ற எதிர்ப்பார்ப்பு தொடங்கியுள்ளது. மேலும், இதனால் திமுகக்கு எதிரான சக்தி ஒருங்கிணைந்த தொடர்ச்சியோடும் தோற்றுவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தற்போது தமிழகத்தில் 170க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு பரப்புரை செய்து வருகிறார். மக்களை காப்போம், தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் கடுமையான பிரசாரம், பொதுமக்களின் மனதில் எதிர்கால அரசியலுக்கான நம்பிக்கை மற்றும் மாற்றத்தின் உரிமையை நிலைநாட்ட முயற்சித்து வருகிறார். இதன் படி, அதிமுக - தவெக கூட்டணி வைத்தால் அடுத்த தேர்தலில் பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









