தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தற்போது மக்களை சந்திக்க களத்தில் இறங்கி உள்ளார். இதுவரை இரண்டு மாநாடுகளை நடத்திய அவர் தற்போது பிரச்சாரம் செய்ய தொடங்கி இருக்கிறார். நேற்று (செப்டம்பர் 13) திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூரில் மக்களை சந்தித்து பேசினார். சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த விஜய்யை வரவேற்க, லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். விமான நிலையத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரச்சார இடமான மரக்கடை செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது. பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய், மாவட்டத்தின் பிரச்சனைகளை மையப்படுத்தி பேசினார். ஓவ்வொரு இடத்திலும் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அவர் பேசினார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மக்களுக்கு நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது என வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்" எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.
இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.
வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: நாகையில் அடுத்த பிரச்சாரம்.. ஆனால் சிக்கல்? விஜய்-க்கு எதிராக வரும் திமுக!
மேலும் படிக்க: பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது? வெளியான தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









