அரவிந்த் கெஜ்ரிவாலை எப்படி தூக்கி வீசிவிட்டு டெல்லியில் ஆட்சி அமைத்தோமோ, அதே போல 2026 தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி அளித்துள்ளார். மதுரை மண்ணுக்குரிய முத்துராமலிங்க தேவரை அமித்ஷா அவர்கள் நினைவு கூர்ந்து இருக்கிறார், நாம் அரசியலுக்காக பண்ணவில்லை நாம் நம்முடைய தலைவர்களை போற்ற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் உணர்வு, முக்குலத்தோர் வாக்குகளுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசவில்லை என்றும், NDA கூட்டணியில் விஜயா? என்ற கேள்விக்கு உடனடியாக நன்றி கூறிவிட்டு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் காரில் ஏறினார்.
மேலும் படிக்க | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித் ஷா சாமி தரிசனம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு டெல்லி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அவரை வழி அனுப்பி வைப்பதற்காக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோர் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், ஆப்ரேஷன் சிந்து சித்தூர் மிகப்பெரிய வெற்றி மூன்று கிலோமீட்டர் பாகிஸ்தான் எல்லை சென்று நாம் மிகப் பெரிய தாக்குதலை நடத்தி இருக்கிறோம். தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பாடத்தை புகட்டி உள்ளோம்.
அதேதான் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அவருடைய வழிகாட்டுதல் என்றும் நமக்கு இருக்கும். 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கிவிட்டது. 22 ஆம் தேதி மதுரையில் மிகப்பெரிய முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது, அதற்கான வாழ்த்துகளையும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநாட்டின் நோக்கத்தையும் அவர் கூறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வணங்கிக் கொண்டிருக்கிற ஒரு பகுதி திருப்பரங்குன்றம் அங்கு நாம் கூட வெற்றிவேல் யாத்திரை நடத்தினோம்.
திருப்பரங்குன்றம் மலையை மீட்க வேண்டும், மீண்டும் அங்கு பூஜைகள் நடத்தி விளக்கேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தான் இந்த முருக பக்தர் மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு மத்திய அமைச்சர்கள் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் வருகை தர இருக்கின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலை எப்படி தூக்கி வீசிவிட்டு அங்குஆட்சி அமைத்தோம் அதேபோல 2026 தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெறும். எப்படி அரவிந்த் கெஜ்ரிவாலை அங்கு மக்கள் வீட்டிற்கு ஆட்சியை விட்டு துரத்தினார்களோ அதேபோல ஸ்டாலினையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். அண்ணாமலை எப்பொழுதுமே வழிகாட்டியாக தலைவராக இருக்கிறார், அவர் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி பல்வேறு மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளார்.
அதன் வெளிப்பாடு தான் தொண்டர்கள் ஆதரவு, அது எங்களுக்கும் கட்சிக்கும் வலு சேர்க்கும். Nda கூட்டணியில் விஜயா என்ற கேள்விக்கு உடனடியாக நன்றி கூறிவிட்டு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் காரில் ஏறினார். முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதற்காகவா அமித்ஷா முத்துராமலிங்க தேவர் பற்றி பேசினாரா என்ற கேள்விக்கு, நாம் தேசிய தலைவர்களை நினைவு கூறுவது வழக்கமான ஒன்று. அதை சுட்டிக்காட்டி தான் இந்த மண்ணில் மதுரை மண்ணுக்குரிய முத்துராமலிங்க தேவர் அவர்களை நினைவு கூர்ந்து இருக்கிறார். நாம் அரசியலுக்காக பண்ணவில்லை, நாம் நம்முடைய தலைவர்களை போற்ற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் உணர்வு பூர்வமான ஒன்று. அதன் வெளிப்பாடுதான் அமித்ஷா அவர்கள் பேசியது, அந்தந்த மண் சார்ந்த தலைவர்களை போற்ற வேண்டும் என்பது தான் பாஜகவின் எண்ணம் என்றார்.
மேலும் படிக்க | இளையராஜா காலில் விழுந்து வணங்கிய அண்ணாமலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









